(2132)

(2132)

எளிதி லிரண்டையும் காண்பதற்கு, என்னுள்ளம்

தெளியத் தெளிந்தொழியும் செவ்வே, – களியில்

பொருந்தா தவனைப் பொரலுற்று , அரியாய்

இருந்தான் திருநாமம் எண்.

 

பதவுரை

என் உள்ளம்

எனது நெஞ்சே!(நீ)

தெளிய

கலக்கம் தீர்ந்து தெளிவுபெற்றால்

(அந்த எம்பெருமானும்)

செவ்வே தெளிந்தொழியும்

மிகவும் நன்றாக ப்ரஸந்நனாவன்;

(ஆகையினால்)

களியில்

அஹங்காரத்தாலே

பொருந்தாதவனை

அடிபணியாதிருந்த ஹிரண்யாஸீரனோடு

பொரல் உற்று

போர்செய்யத் தொடங்கி

அரி ஆய் இருந்தான்

நரசிங்கமாக அவதரித்த பெருமானுடைய

திரு நாமம்

திருநாமங்களை,

இரண்டு அடியும் எளிதில் காண்பதற்கு

(அவனுடைய) உபய பாதங்களையும் சுலப மாகக் காணும் பொருட்டு

எண்

சிந்திப்பாயாக.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய திருநாமங்களைப் பரமபோக்யமாக நாம் வாயாரச் சொல்லவே, அப்பெருமான் ப்ரஹ்லாதாழ்வானுடைய விரோதியைத் தொலைத்துத் தன்னைக் கொடுத்தாப் பேர்லே நமக்கும் விரோதியைப் போக்கித் தன்னைத் தந்தருள்வனென்கிறார்.

என்னுள்ளம் என்றது அண்மைவிளி; என்னுள்ளமே! என்றபடி. நீ எம்பெருமானுடைய திருவடியிணையை ஸேவித்து அநுபவிப்பதற்கித் தெளிவுகொண்டிருந்தால் அவன் ப்ரஸந்நனாய் அருள்புரிவன்; நீ தெளிவுற்றிருக்கிறாயென்பது நன்குவிளங்குமாறு ஸ்ரீ நரசிம்ஹமூர்த்தியின் திருநாமங்களை எண்ணிக்கொண்டிரு.

 

English Translation

Easily the Lord will grant you the vision of his lotus feet, O Heart! He came as a man-lion intending to destroy the unrelenting Hiranya. Contemplate his name it is Mantra of eight syllables.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top