(2134)
சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்,
நின்றால் மரவடியாம் நீள்கடலுள், – என்றும்
புணையாம் மணிவிளக் காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம், திருமாற் கரவு.
பதவுரை
|
திரு மாற்கு |
– |
பிராட்டியோடு (எப்போதும்) கூடியிருக்கிற பெருமானுக்கு |
|
அரவு |
– |
திருவனந்தாழ்வான், |
|
சென்றால் குடை ஆம் |
– |
(அப்பெருமான் )உலாவினால் (அப்போது மழை வெயில் படாதபடி) குடையாக உருவெடுப்பன்; |
|
இருந்தால் |
– |
எழுந்தருளியிருந்தால் |
|
(அப்போது) |
||
|
சிங்காசனம் ஆம் |
– |
ஸிம்ஹாஸாமாயிருப்பன்; |
|
நின்றால் |
– |
நின்று கொண்டிருந்தால் |
|
(அப்போது) |
||
|
மரவடி ஆம் |
– |
பாதுகையாவன்; |
|
நீள் கடலுள் |
– |
பாம்பினையுடலிலே |
|
(சயனிக்கும்போது) |
||
|
என்றும் |
– |
எப்போதும் |
|
புணை ஆம் |
– |
திருப்பள்ளி மெத்தையாவன்; |
|
அணி விளக்கு ஆம் |
– |
மங்கள தீபமாவன்; |
|
பும்பட்டு ஆம் |
– |
அழகிய திருப்பரி வட்டமாவன்; |
|
புல்கும் அணை ஆம் |
– |
தழுவிக்கொள்வதற்கு உரிய அணையுமாவன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திருவனந்தாழ்வானைப்போல எம்பெருமானுக்கு எல்லாக்காலங்களிலும் எல்லா விதமான அடிமைகளையும் செய்யப்பெற வேணுமென்று திருவுள்ளங்கொண்ட ஆழ்வார் அத்திருவனந்தாழ்வான் செய்யுமடிமைகளை யெடுத்தருளிச் செய்கிறார். எம்பெருமான் உலாவியருளும் போது மழை வெயில் படாதபடி குடையாகவடிவெடுப்பன்; எழுந்தருளீயிருந்தகாலத்தில் திவ்யஸிம்ஹாஸநஸ்வரூபியாயிருப்பன்; நின்று கொண்டிருந்தால் பாதுகையாயிருப்பன்; திருப்பாற்கடலில் திருக்கண்வளர்ந் தருளும்போது திருப்பள்ளி மெத்தையாயிருப்பன்; ஏதேனு மொன்றை விளக்குக்கொண்டுகாண அவன் விரும்பினபோது திருவிளக்குமாவன்; சாத்திக்கொள்ளும்படி திருப்பரிவட்டத்தை அவன் விரும்பினபோது அதுவுமாவன்; சாயந்தருளும்போது தழுவிகொள்வதற்குரிய உபதாநமுமாவன்.
நீள்கடலுள் புணையாம் – திருப்பாற்கடலில் அழுந்தாதபடி தெப்பமாவன் என்று முரைக்கலாம் . புல்கும் அணையாம் –எம்பெருமான் பிரணயகலஹத்தினால் பிராட்டிமாரைப் பிரியநேர்ந்தால் அப்போது விரஹதுக்கம் தோன்றாதபடிக்குத் திருவனந்தாழ்வானைத் தழுவிக்கொள்வனாம்.
மூன்றாமடியில் “ மணி விளக்காம்” என்றும் பிரிக்கலாம்
English Translation
Tirumal has a snake, when he walks, it hoods him like a parasol; when he sits, it folds itself into a settle; when he stands, it is at his feet like his sandals; in the deep ocean where he reclines, it becomes a float., its eyes become lamps, if wraps around like gossamer silk and becomes an arm-rest for the Lord.
