(2108)

(2108)

மலையால் குடைகவித்து மாவாய் பிளந்து,

சிலையால் மராமரமேழ் செற்று, – கொலையானைப்

போர்க்கோ டொசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்

காக்கோடு பற்றியான் கை.

 

பதவுரை

மலையால்

கோவர்த்தன கிரியைக்கொண்டு

குடை கவித்து

குடையாகப் பிடித்தும்,

மா வாய் பிளந்து

குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னும் அஸுரனுடைய வாயைப்பிளந்தும்,

சிலையால்

வில்லைக்கொண்டு

மராமரம் ஏழ் செற்று

ஸப்த ஸாலவிருக்ஷங்களை அழித்தும்,

(இச்செயல்களோடு நிற்காமல்)

கொலை யானை

கொலைசெய்வதாக வந்த குவலயா பீடமென்னும் யானையினுடைய

போர் கோடு

சண்டைசெய்ய உதவியாயிருந்த தந்தங்களை

ஒசித்தனவும்

பிடுங்கினவையும்.

பூ குருந்தம்

பூ வோடுகூடிய குருந்த மரத்தை

சாய்த்தனவும்

வேரோடே பறித்துத் தள்ளினவையும்                  (எவையென்றால்)

கார்

(கம்பீரமாக முழங்குவதில்) மேகத்தையொத்த

கோடு

சங்கை

பற்றியான்

ஏந்தியிருக்கின்ற பெருமானுடைய

கை

திருக்கைகளேயாகும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் திருவேங்கட மலையை அநுபவித்துப்பேசின ஆழ்வார் பிறகு திருவேங்கட முடையானையும் ஸேவித்து அவனது திருக்கைகளினழகிலே ஆழங்காற்பட்டார்;

அவை மிகவும் ஸுகுமாரமாக இருந்தும் ராமகிருஷ்ணாதியவதாரங்களில் பெரிய வீரச்செயல்களையெல்லாம் சிறிதும் வருத்தமின்றிச் செய்தனவே! என்று ஈடுபட்டு, அத்திருக்கைள் இன்றைக்கும் அந்த வீரப்பாடு தோன்ற விளங்கும்படியை யாவரும் காணலாமென்கிறார்.

ஆக மலையால் குடைகவித்ததும் மாவாய்பிளந்ததும் மராமாமேழ் செற்றதும், யானைக்கொம்புபறித்ததும் பூங்குருந்தம் சாய்த்ததும் இத்திருக்கைகளே காண்மின் என்று பழைய வீரச்செயல்களை ஸ்மரித்து அநுஸந்தித்தாராயிற்று.

 

English Translation

A hill, inverted, became an umbrella to protect the cows.  The Lord fore the horse kesin’s jaws and pierced an arrow through seven trees, plucked a tusk of the rutted elephant, and destroyed the Kurundu trees, Such is the power in the lord-of-Venkatam’s hands!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top