(1998)
கோதைவேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்,
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ,
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டா னாகிலும்,
ஓதநீர் வையகம்முன் உண்டுமிழ்ந்தான் சாழலே.
பதவுரை
|
ஏடீ |
– |
தோழீ! |
|
கோதை வேல் ஐவர்க்கு ஆய் |
– |
(அரசர்க்குரிய) பூமாலையையும் வேற்படையையும் உடையவரான பஞ்சுபாண்டவர்களுக்கு விதேயனாய் |
|
மண் அகலம் கூறு இடுவான் |
– |
குரு பாண்டவாகட்குப் பூமியைப் பங்கிட்டுக் கொடுத்து சந்தி செய்வதற்காக |
|
தூதன் ஆய் |
– |
தூதுசென்றவனாய் |
|
மன்னவனால் |
– |
துரியோதனனென்னும் அரசனாயல் |
|
சொல் உண்டான் காண் |
– |
இழிவான சொற்களைச்சொல்லப் பெற்றானன்றோ? |
|
சாழலே |
– |
தோழீ! |
|
தூதன் ஆய் மன்னவனால் கொல்லுண்டான் ஆகிலும் |
||
|
முன் |
– |
முன்பொருகால் |
|
ஓதம் நீர் வையகம் |
– |
கடல் சூழ்ந்த உலகத்தையெல்லாம் |
|
உண்டு உமிழ்ந்தான் |
– |
(பிரளயங்கொள்ளாதபடி) வயிற்றிலே வைத்து நோக்கி வெளிப்படுத்தினான்காண்க. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தோழீ! நீ உகக்கும் பெருமான் எல்லார்க்கும் மேம்பட்டவனாகவன்றோ இருக்கவேண்டும்? அவன் அப்படி யிருந்தானாகில் பிறர்க்கு இழிதொழில்செய்து திஜீவனோ பஞ்சபாண்டவர்களுக்கு அரசுரிமை பெறுவித்தற்பொருட்டுப் ‘பரண்டவதூதன்’ என்று பெயர்சுமந்து துரியோதனாதிகளிடத்தில் தூது நடந்தான்; அங்ஙனே நடந்தவிடத்திலே அந்தத் துரியோதனனால் இழிவான வார்த்தைகளைச் சொல்லப்பெற்றான்; இவனையோ நீ பரமபுருஷனென்று கொண்டாடுவது? என்ன் அதற்கு மறுமொழி கூறுகின்றாள் மற்றொருத்தி; – பாண்டவாக்ட்குத் தூது நடந்ததும் மன்னவனால் சொல்லுண்டதும் மெய்யே; இவற்றையேயோ நீ பார்ப்பது; கடல்சூழ்ந்த வுலகங்களையெல்லாம் முன்பு பிரளயங் கொள்ளாதபடி திருவயிற்றினுள் வைத்துப் பிறகு வெளிப்படுத்தினவன் இவனே என்கிற பெருமையை அறிந்திலைபோலுமென்கிறாள்.
கோதை=அரசர்க்கு லக்ஷணமான பூமாலையைச் சொன்னபடி; அரசுரிமையை இழந்திருந்த பாண்டவர்கட்கு அப்பேவாது பூமாலையில்லையாகிலும் அதனை அணிவதற்குரிய ஸ்வரூப யோக்யதையைக் கொண்டு இங்கு இவ்விசேஷணமிட்டபடி.
English Translation
“Aho, Sister! For the sake the five Pandava princes he went as a messenger seeking a stretch of land, and ate words of abuse from the king Duryodhana, See!”.
“But though he ate, words of abuse from the king, he also swallowed the ocean-girdled world and brought if out during the deluge, so tally!”.
