(1721)

(1721)

உளைந்த அரியும் மானிடமும் உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து,

விளைந்த சீற்றம் விண்வெதும்ப வேற்றோன் அகலம் வெஞ்சமத்து,

பிளந்து வளைந்த வுகிரானைப் பெருந்தண் செந்நெற் குலைதடிந்து,

களஞ்செய் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.

பதவுரை

உளைந்த

கண்டபோதே அஞ்சி நடுங்க வேண்டும்படியான
அரியும்

சிங்கவுருவத்தையும்
மானிடமும்

மனிதவுருவத்தையும்
உடனாய் ஒன்றுவித்து

ஒருசேரப் பொருந்தச் செய்து
தோன்ற

(நரஸிம்ஹரூபியாய்த்)தோன்ற (அப்போது)
விளைந்த

உண்டான
சீற்றம்

கோபத்தைக் கண்டு
விண் வெதும்ப

விண்ணுலகத்தவர்களும் அஞ்சி நடுங்க
வேற்றோன்

பகைவனான இரணியனுடைய
அகலம்

மார்பை
வெம் சமத்து

வெவ்விய போர்க்களத்திலே
பிளந்து

இருபிளவாக்கி
வளைந்த உகிரானை

வளைந்த நகங்களையுடைய பெருமானை,
பெரு

பெருத்த
தண்

அழகிய
செந்நெல் குலை

செந்நெற்கதிர்கள்
தடிந்து

வயிரம்பற்றி
களம் செய்

இருள் மூடியிருக்கப்பெற்ற
புறவில்

சுற்றுப்பிரதேசங்களை யுடைத்தான
கண்ணபுரத்து

திருக்கண்ணபுரத்திலே

அடியேன் கண்டுகொண்டேன்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- செந்நெற்குலை தடித்து களஞ்செய் புறவிற் கண்ணபுரத்து = ‘களம்’ என்பதற்கு உள்ள பல பொருள்களில் ‘இருள்’ என்னும் பொருள் இங்குக் கொள்ளப்பட்டது.

நெற்கதிர்கள் செழிப்பாக முற்றி எங்கும் இரண்டுகிடக்கின்றபடி.  இனி, ‘களம்’ என்பதற்கு நெற்களம் என்றே பொருள் கொள்ளவுமாம்.  நெற்களத்தின் செய்கை எங்கும் என்றும் மாறாதிருக்கும்படியைக் கூறினவாறு.

English Translation

The Lord then appeared as a terrible man-and-lion-in-one, whose wrath even the gods feared.  He took the cruel Hiranya and fore into his chest with sharp curved nails.  I know he is in kannapuram, surrounded by fertile paddy fields.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top