(1719)

(1719)

மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக அங்கோர் வரைநட்டு

இலங்கு சோதி யாரமுதம் எய்து மளவோர் ஆமையாய்,

விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை,

கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.

 

பதவுரை

மலங்கு

(உள்ளுக்கிடக்கிற) மீன்சாதிகள்

விலங்கு

தடுமாறும்படியான

நெடுவெள்ளம்

பெரிய வெள்ளம்

மறுக

குழம்பும்படியாக

அங்கு

ஆழமான அவ்விடத்திலே

ஓர் வரை நட்டு

ஒரு (மந்தர) பர்வதத்தை நாட்டி

இலங்கு சோதி ஆர் அமுதம்

விளங்குகின்ற தேஜஸ்ஸோடு கூடின அம்ருதமானது

எய்தும் அளவு

தோன்றும் வரையில்

ஓர் ஆமை ஆய்

ஒப்பற்ற ஆமையா யிருந்துகொண்டு

விலங்கல்

அந்த மந்தரமலையானது

திரிய

நாற்புறமும் திரிந்து வரும்படியாக

தட கடலுள்

பெரிய அக்கடலிலே

சுமந்து கிடந்த

(அம்மலையைத்) தாங்கிக்கொண்டிருந்த

வித்தகனை

ஆச்சரியபூதனான பெருமானை

கலங்கல் முந்நீர் கண்ணபுரத்து

கலக்கமுள்ள கடலை அணித்தாக வுடைய திருக்கண்ணபுரத்திலே

அடியேன் கண்டுகொண்டேன்-

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கூர்மாவதாரம் செய்தருளின பெருமானைத் திருக்கண்ணபுரத்திலே ஸேவிக்கப்பெற்றேனென்கிறார்.

ஆழத்துக்கு அவதியில்லாத விடத்திலே மந்தரமலையைக் கொண்டுபோய் நிறுத்து மளவிலே அப்போதுண்டான குழப்பத்தைச் சொல்லுகிறது ‘மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக’ என்று.  மலங்கு – மீன்களில் ஒருவகைச்சாதி.  அமுத மென்பது – போன வுயிரை மீட்குந் தன்மையதான புகர் பெற்றிருத்தல் பற்றி ‘இலங்கு சோதி யாரமுதம்’ எனச் சிறப்பித்துக் கூறப்பட்டது.  விலங்கல் திரிய = “மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால், மின்னுமிருசுடரும் விண்ணும் பிறங்கொளியும், தன்னினுடனே சுழல மலை திரித்து” என்ற பெரிய திருமடல் இங்கு அநுஸந்திக்கத் தக்கது.

 

English Translation

The ocean turned, the sea creatures jumped, when the Lord planted the Mandara mount and churned for ambrosia; to hold the mount from sinkingk or rolling, he came as a wonder-furtile and bore it on his back.  I know he is in kannapuram, situated by the lashing ocean.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top