(1717)
மலிபுகழ் கணபுர முடையவெம் அடிகளை
வலிகெழு மதிளயல் வயலணி மங்கையர்
கலியன தமிழிவை விழுமிய இசையினொடு
ஒலிசொலும் அடியவர் உறுதுய ரிலரே.
பதவுரை
|
மலி புகழ் |
– |
நிறைந்த புகழையுடைய |
|
கணபுரம் |
– |
திருக்கண்ணபுரத்தை |
|
உடைய |
– |
இருப்பிடமாகவுடைய |
|
எம் அடிகளை |
– |
எம்பெருமான் விஷயமாக |
|
வடி கெழு |
– |
திண்மை பொருந்திய |
|
மதிள் |
– |
மதிளையும் |
|
அயல் |
– |
சுற்றுப்புறங்களில் |
|
வயல் |
– |
கழனிகளையும் |
|
அணி |
– |
அலங்காரமாகக்கொண்ட |
|
மங்கையர் |
– |
திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான |
|
கலியன |
– |
திருமங்கையாழ்வாருடைய |
|
இவை தமிழ் |
– |
இத்தமிழ்ப் பாசுரங்களை |
|
விழுமிய இசையினொடு |
– |
சிறந்த இசையோடு கூட |
|
ஒலி சொலும் |
– |
அப்யஸிக்கின்ற |
|
அடியவர் |
– |
பக்தர்கள் |
|
உறு துயர் இலர் |
– |
அவச்யமபவிக்குப்படியாக ஏற்பட்ட துக்கங்களினின்றும் விடுபட்டவராவர். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கலியன = அ – ஆறாம் வேற்றுமையுருபு.
இத் திருமொழியின் இசை பரமபோக்கியமாதலால் ‘விழுமிய விசையினொடு’ என்றது.
English Translation
These Tamil songs by kaliyan, king of stone-walls-and-fertile-fields-surrounded Mangai fract, extol the celebrated Lord of kannapuram. Devotees who consing it funefully will have no karmic sin.
