(1714)

(1714)

பரிதியொ டணிமதி பனிவரை திசைநிலம்

எரிதியொ டெனவின இயல்வினர் செலவினர்

சுருதியொ டருமறை முறைசொலு மடியவர்

கருதிய கணபுரம் அடிகள்தம் இடமே.

 

பதவுரை

சுருதியொடு

ஸ்வரத்தோடு கூடின

அரு மறை

அருமையான வேதங்களை

முறை

முறைப்படியே

சொலும்

ஓதுகின்ற

அடியவர்

ஸ்ரீ வைஷ்ணவர்கள்

கருதிய

(நமக்கு இவ்விடமே ப்ராப்யம் என்று) அநுஸந்திக்கப்பெற்ற

கணபுரம்

திருக்கண்ணபுரமானது,-

பரிதியொடு

ஸூர்யனென்ன

அணி மதி

அழகிய சந்திரனென்ன

பனி வரை

இமயமலை முதலிய குலபர்வதங்களென்ன

திசை

திக்குக்களென்ன

நிலம்

பூமண்டல மென்ன

எரி

ஜ்வலிக்கின்ற

தியொடு

அன்நி யென்ன

என

என்று சொல்லப்படுகிற

இன

இப்படிப்பட்ட பொருள்களையெல்லாம்

இயல்வினர்

ப்ரகாரமாகவுடையவரும்

செலவினர்

இவற்றை நடத்திக்கொண்டு போருகிறவருமான

அடிகள் தம் இடம்

ஸ்வாமியின் திவ்ய தேசமாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ???????? என்னும் வடசொல் சந்திரனையும் ஸூர்யனையுஞ் சுற்றியிருக்கிற ‘ஊர் கோள்’ எனப்படும் பரிவேஷத்தைச் சொல்லுவதாயினும், அவ்வட சொல்லின் திரிபாகிய ‘பரிதி’ என்னுந் தமிழ்ச்சொல் ஸூர்யவாசமாக வழங்கும்.  ‘பனிவரை’ என்று இமயமலை யொன்றைச் சொன்னது மற்றுமுள்ள குலபர்வதங்களுக்கும் உபலக்ஷணமென்ப.

இரண்டாமடியில் தீ என்னுஞ் சொல் ‘தி’ எனக் குறுகிநிற்பது செய்யுள் விகாரம்.

‘சுருதி’ என்பது வேதவாசகமாயினும் அடுத்து ‘அருமறை’ என வந்திருத்தலால் ஸ்வரமென்று பொருள் கொள்ளப்பட்டது.

 

English Translation

The Lord who is the maker and monitor of the sun, the Moon, the Mountains, the Quarters, the earth and fire, resides in kannapuram where devotees throng to chant and rcite the Vedas and upanishads properly.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top