(1713)
மழுவியல் படையுடை யவனிடம் மழைமுகில்,
தழுவிய உருவினர் திருமகள் மருவிய
கொழுவிய செழுமலர் முழுசிய பறவைபண்
எழுவிய கணபுரம் அடிகள்தம் இடமே.
பதவுரை
|
திருமகள் மருவிய |
– |
எரிய பிராட்டியார் பொருந்தியிருக்கப்பெற்ற |
|
கொழுவிய செழு |
– |
மிகவும் செழுமைதங்கிய |
|
மலர் |
– |
தாமரைப்பூவிலே |
|
முழுசிய |
– |
அவகாஹித்த |
|
பறவை |
– |
(வண்டுகளாகிய) பறவைகளினுடைய |
|
பண் |
– |
இசைப்பாட்டுகள் |
|
எழுவிய |
– |
எங்கும் வியாபிக்கப்பெற்றதான |
|
கணபுரம் |
– |
திருக்கண்ணபுரமானது,- |
|
மழு |
– |
மழுவை |
|
இயல்படை உடையவன் இடம் |
– |
விதேயமான ஆயுதமாகவுடைய பெருமானது இருப்பிடம்; |
|
(இன்னமும்) |
||
|
மழை முகில் தழுவிய உருவினர் |
– |
நீர் கொண்டெழுந்த மேகம் போன்ற திருவுருவத்தை யுடையரான |
|
அடிகள் தம் |
– |
ஸ்வாமியினுடைய |
|
இடம் |
– |
திவ்ய தேசமாம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பாட்டில் ‘இடம்’ என்பது இருமுறையுள்ளது, முதலடியிலும் ஈற்றடியிலும். ஆழ்வாருடைய திருவுள்ளமே இதற்கு நியாமகம்.
‘திருமகள் மருவிய’ என்ற விசேஷணம் மலர்க்கும் ஆகலாம், கணபுரத்துக்கும் ஆகலாம். கணபுரத்துக்காகில் செல்வம் மல்கியவூர் என்றவாறாம். மலர்க்கு ஆகில், எம்பெருமானார் கத்யத்தில் “பத்மவங லயாம்” என்று அருளிச்செய்தபடியே தாமரை மலர்தோறும் பெரிய பிராட்டியார் உறைகின்றமை உணரத்தக்கது.
English Translation
The Lord who wieled an ae and has a cloud hue resides permanantly with the lady Sri in kannapuram where lotus blossoms everywhere are thronged by bees that sing in beautiful panns.
