(1712)

(1712)

தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுதெழ

அண்டமொ டகலிடம் அளந்தவர் அமர்ச்செய்து

விண்டவர் படமதி ளிலங்கைமுன் னெரியெழ

கண்டவர் கணபுரம் அடிகள்தம் இடமே.

 

பதவுரை

கணபுரம்

திருக்கண்ணபுரமானது,-

தொண்டரும்

ஸ்ரீ வைஷ்ணவர்களும்

அமரரும்

பிரமன் முதலிய தேவர்களும்

முனிவரும்

யோகிகளும்

தொழுது எழ

வணங்கி உஜ்ஜீவிக்கும்படியாக

அண்டமொடு

மேலுலகங்களையும்

அகல் இடம்

பரம்பிய நிலவுலகங்களையும்

அளந்தவர்

அளந்து கொண்டவரும்

விண்டவர்

சத்துருக்கள் அழிந்து போம்படி

அமர் செய்து

யுத்தம் பண்ணி

மதிள் இலங்கை

மதிளையுடைய இலங்காபுரி

முன்

முன்பொருகால்

எரி எழ

தீக்கொளுவி யெரியும்படியாக

கண்டவர்

ஸங்கல்பித்தவருமான

அடிகள் தம்

ஸ்வாமியினுடைய

இடம்

திவ்யதேசமாம்.

 

English Translation

The Lord who waged a war and razed the fortressed city of Lanka, and who measured the Earth and sky in two strides resides in kannapuram where devotees, celestials and bands flock for worship and elevation of spirit.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top