(1709)

(1709)

இணைமலி மருதினொ டெருதிற இகல்செய்து

துணைமலி முலையவள் மணமிகு கலவியுள்,

மணமலி விழவினொ டடியவர் அளவிய,

கணமலி கணபுரம் அடிகள்தம் இடமே.

 

பதவுரை

மணம் மலி

மகிழ்ச்சி மிகுந்த

விழவினொடு

திருவிழாக்களில்

அடியவர்

ஸ்ரீவைஷ்ணவர்கள்

அளவிய

நெருங்கப்பெற்ற

கணம்

திரள்

மலி

நிறைந்துள்ள

கணபுரம்

திருக்கண்ணபுரமானது,-

இணை மலி

சேர்த்தி பொருந்திய

மருத

(இரட்டை) மருதமரங்களை

இற

இற்று முறிந்துவிழும்படி (செய்தவனும்)

எருதினொடு

(ஏழு) எருதுகளோடே

இகல் செய்து

போர்புரிந்து

துணை மலி முலையவள்

சேர்த்தியழகுவாய்ந்த முலைகளை யுடையளான நப்பின்னைப் பிராட்டியின்

மணம்

விவாஹத்தாலுண்டாகக் கூடிய

மிகு கலவி

மிகுந்த ஸம்ச்லேஷத்தை

உள்

உட்கொண்ட

அடிகள் தம்

ஸ்வாமியினுடைய

இடம்

திவ்யதேசமாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நித்யோத்ஸவ பக்ஷோத்ஸவ மாஸோத்ஸவ ஸம்வத்ஸரோத்ஸவங்களென்று சொல்லப்படுகிற மஹோத்ஸவங்கள்தோறும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் குழாங்கூடி அநுபவிக்கப் பெற்ற திருக்கண்ணபுரம் – இரட்டை மருத மரங்களைத் தவழ் நடைப் போக்கிலே முறித்தொழித்தவனும், ஏழ்விடை செற்று நப்பின்னைப் பிராட்டியின் கலவியை அநுபவித்தவனுமான பெருமான் உறையுமிடம் என்பதாம்.

இகல் – பகையும், யுத்தமும், கலவியுள் – கலவிக்காக, எருதினோடு இகல் செய்து, அந்தவிடாய் தீர உளையுமிடம் திருக்கண்ணபுரம் என்னவுமாம்.

 

English Translation

The Lord who uprooted the twin Marudu trees and fought seven bulls for the joy of union with corsetted Nappinnai resides in kannapuram which is teaming with love killed devotees during auspicious festival days.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top