(1708)
வியமுடை விடையினம் உடைதர மடமகள்,
குயமிடை தடவரை யகலம துடையவர்,
நயமுடை நடையனம் இளையவர் நடைபயில்,
கயமிடை கணபுரம் அடிகள்தமிடமே.
பதவுரை
|
நயம் உடை நடை |
– |
அழகிய நடையையுடைய |
|
அனம் |
– |
அன்னப் பறவைகள் |
|
இளையவர் |
– |
இளம் பெண்களினுடைய |
|
நடை |
– |
நடையை |
|
பயில் |
– |
அப்யஸிக்கப்பெற்றதும் |
|
கயம் |
– |
தடாகங்கள் |
|
மிடை |
– |
நெருங்கியிருக்கப் பெற்றதுமான |
|
கணபுரம் |
– |
திருக்கண்ணபுரமானது,- |
|
வியம் உடை விடை இனம் |
– |
வலிமை பொருந்திய விருஷபங்களின் கூட்டமானது |
|
உடைதர |
– |
அழிந்தவளவிலே |
|
மட மகள் |
– |
மடமைக் குணமுடைய நப்பின்னைப் பிராட்டியானது |
|
குயம் |
– |
திருமுலைகள் |
|
மிடை |
– |
நெருங்கியணைப்பெற்ற |
|
தட வரை அகலமது உடையவர் |
– |
பெரிய மலை போன்ற திருமார்பையுடையவரான |
|
அடிகள் தம் |
– |
ஸ்வாமியினுடைய |
|
இடம் |
– |
திவ்யதேசமாம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- முன்னடிகளில் திருக்கண்ணபுரத் தெம்பெருமானுடைய பெருமையும் பின்னடிகளில் திருக்கண்ணபுரத்தின் சிறப்பும் சொல்லப்படுகின்றன. அன்னப் பறவைகள் இளமகளிரது அழகிய நடையை அநுகரித்து நடைபயிலப் பெற்றதும் பலவகைத் தடாகங்கள் நெருங்கியிருக்கப் பெற்றதுமான திருக்கண்ணபுரம் – ஏழ்விடைகளைச் செற்று நப்பின்னைப் பிராட்டியின் திருமுலைத்தடங்களைத் திருமார்பாரத் தழுவிய பெருமான் உறையுமிடம் என்பதாம்.
வியமுடை விடையினம் = ‘வியம்’ என்னுஞ் சொல்லுக்குப் பல பொருள்களுண்டு; வலிமை யென்னும் பொருள் இங்குக் கொள்ளப்பட்டது. வேறுபாடு என்னும் பொருளுங் கொள்ளலாம்; கறுக்கொண்ட கஞ்சனால் ஏவப்பட்ட வந்தவையாகையாலே எங்குங் கண்டறியாத வேறுபட்ட வடிவையுடைய விடையினம் என்றவாறு. இனி ‘வியம்’ என்று ஏவலுக்கும் பெயராதலால் (கம்ஸனுடைய) ப்ரேரணையையுடைய விடையினம் என்னவுமாம்.
உடைதர – உடைய; தா – துணைவினை. உடைதல் – அழிதல்.
‘ ????????’ என்னும் வடசொல் குய மெனத் திரிந்தது. மிடைதல் – நெருங்குதல். “குயமுடை தடவரை” என்றும் வியாக்யானத்திற் பாடம் கொள்ளப்பட்டது. அப்பாடத்தில் “குயமுடைத் தடவரை” எனத் தகரவொற்று மிக்கிருக்க வேண்டுவது இல்லாமை – ஓசையின்பம் பற்றி வேண்டுழிக் கொண்ட விகாரமெனக் கொள்க. மூன்றாமடியில், ‘அன்னம்’ அனமெனத் தொக்கி யிருக்கிறது.
English Translation
The Lord who destroyed seven bulls and embraced the mountain-like breasts of the cowhered-dame Nappinnai resides in kannapuram where swans in lakes learn the art of graceful gait from young dames.
