(1710)
புயலுறு வரைமழை பொழிதர மணிநிரை,
மயலுற வரைகுடை யெடுவிய நெடியவர்,
முயல்துளர் மிளைமுயல் துளவள விளைவயல்,
கயல்துளு கணபுரம் அடிகள்தம் இடமே.
பதவுரை
|
முயல் துளர் |
– |
முயற்சிசெய்கிற களைக்கொட்டுகளையுடைய |
|
மிளை |
– |
சிறுதூறுகளில் நின்றும் |
|
முயல் |
– |
முயல்களானவை |
|
துள |
– |
துள்ளவும், |
|
வளம் |
– |
செழிப்பாக |
|
விளை |
– |
விளைகின்ற |
|
வயல் |
– |
கழனிகளிலே |
|
கயல் |
– |
கயல்மீன்கள் |
|
துளு |
– |
துள்ளவும் பெற்ற |
|
கணபுரம் |
– |
திருக்கண்ணபுரமானது,- |
|
புயல் உறு |
– |
பெருங்காற்றோடு கூடின |
|
வரை மழை |
– |
கல் மழை |
|
பொழிதர |
– |
பொழியுமளவில் |
|
மணி நிரை |
– |
அழகிய பசுக்கள் |
|
மயல் உற |
– |
கலங்கி நிற்க (அப்போது) |
|
வரை |
– |
(கோவர்த்தன) மலையை |
|
குடை |
– |
குடையாக |
|
எடுவிய |
– |
எடுத்த |
|
நெடியவர் |
– |
மஹாபுருஷனான |
|
அடிகள் தம் |
– |
ஸ்வாமியினுடைய |
|
இடம் |
– |
திவ்ய தேசமாம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- களைபறிக்கிறவர்கள் களைக்கொட்டுகளைக் கொண்டு வியாபரிக்கு மளவிலே சிறுதூறுகளில் நின்றும் புறப்பட்ட முயல்கள் அவர்களது முகத்திலே துள்ளவும், செழிப்பு மிக்க வயல்களிலே உழுகிறவர்கள் முகத்திலே கயல் மீன்கள் துள்ளவும் பெற்ற திருக்கண்ணபுரம் – பண்டு இந்திரன் பசிக் கோபத்தாலே ஏழுநாள் கல்மழை பெய்வித்த காலத்துக் கோ நிரைகள் கலங்கிநிற்க அக்கலக்கந் தீருமாறு கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துப்பிடித்த பெருமானுறையுமிடம் என்பதாம்.
English Translation
The Lord who lifted a mountain and protected the swooning cows against a hailstorm resides in kannapuram amid hills where the harvesters sickle brings out rabbits from their burrows and fertile fields where kayal-fish dance enchanted.
