(1703)
வருந்தா திருநீ மடநெஞ்சே நம்மேல் வினைகள் வாரா முன்
திருந்தா அரக்கர் தென்னிலங்கை செந்தீ யுண்ணச் சிவந்தொருநாள்,
பெருந்தோள் வாணற் கருள்புரிந்து பின்னை மணாள னாகி முன்
கருந்தாள் களிறொன் றொசித்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
பதவுரை
| மட நெஞ்சே |
– |
ஸாதுவான நெஞ்சே! |
| நீ வருந்தாது இரு |
– |
நீ வருத்தப்படாமலிரு; |
| நம் மேல் |
– |
நம்மிடத்து |
| வினைகள் |
– |
பாவங்களின் பலன் ஒன்றும் |
| வாரா |
– |
வந்து சேரமாட்டாது; (ஏனென்றால்) |
| முன் |
– |
முன்னே |
| திருந்தா அரக்கர் |
– |
திருந்தாமலிந்த ராக்ஷஸர்களின் ஊராகிய |
| தென் இலங்கை |
– |
தென்னிலங்காபுரியை |
| செம் தீ உண்ண |
– |
சிவந்த நெருப்பு ஆக்ரமித்து உண்ணும்படியாக |
| சிவந்து |
– |
சீற்றங்கொண்டவனும் |
| ஒரு நாள் |
– |
மற்றொருகாலத்தில் |
| பெரு தோள் வாணற்கு |
– |
பெரிய தோள்களையுடைய பாணாஸுரன் விஷயத்தில் |
| அருள் புரிந்து |
– |
(உயிரைக் கவராது விட்டிடுகை யாகிற) கிருபையைச் செய்தருளினவனும் |
| பின்னை மணாளன் ஆகி |
– |
நப்பின்னைப் பிராட்டிக்கு நாதனானவனும் |
| முன் |
– |
முன்பொருகால் |
| கரு தாள் |
– |
வலிமையுள்ள கால்களையுடைய |
| களிறு ஒன்று |
– |
(குவலயாபீடமென்கிற) ஒரு யானையை |
| ஒசித்தான் |
– |
தொலைத்தவனுமான பெருமானுடைய |
|
ஊர், கண்ணபுரம் நாம், தொழுதும்- |
||
English Translation
Despair not, O Frail Heart, no karmic harm con come over us. Then in the yore he burnt Lanka city with fire arrows from his mighty bow. He showed his grace upon Bana, married the good dame Nappinnai. He smote the elephant, bore first, lives in kannapuram, O, let us worship!
