(1702)

(1702)

ஆமை யாகி அரியாகி அன்ன மாகி அந்தணர்தம்

ஓம மாகி ஊழியாய் உலகு சூழ்ந்த நெடும்புணரி

சேம மதிள்சூழிலங்கைக்கோன் சிரமுங்கரமும் துணித்து முன்

காமற் பயந்தான் கருதுமூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.

 

பதவுரை

ஆமை ஆகி

கூர்மரூபியாயும்

அரி ஆகி

நரஸிம்ஹரூபியாயும்

அன்னம் ஆகி

ஹம்ஸரூபியாயும் (அவதரித்தவனும்)

அந்தணர் தம்

பிராமணர்களினுடைய

ஓமம் ஆகி

யாகங்களில் ஆராதிக்கப்படுமவனும்

ஊழி ஆகி

பிரளயகாலத்திலு முள்ளவனும்

நெடு புணரி

ஓங்கின அலைகளையுடைத்தான

உவரி

கடலினால்

சூழ்ந்த

சூழப்பட்டதும்

சேமம் மதிள் சூழ்

காப்பான மதிள்களாலே சூழப்பட்டதுமான

இலங்கை

லங்காபுரிக்கு

கோன்

தலைவனான இராவணனுடைய

சிரமும்

தலைகளையும்

கரமும்

தோள்களையும்

துணித்து

அறுத்தொழித்தவனும்,

முன்

முன்பொருகால்

காமன்

மன்மதனை

பயந்தான்

பிள்ளையாகப் பெற்றவனுமான எம்பெருமான்

கருதும்

திருவுள்ளம் பற்றியிருக்கப்பெற்ற

ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘ஹோமம் :’ என்னும் வடசொல் ஓம மெனத் திரிந்தது; லக்ஷணையால், யாகங்களிலிடும் ஹவிஸஸுக்களைக்  கொள்பவன் என்றவாறு.  ‘உலகு சூழ்ந்த நெடும் புணரி’ என்று பெரும் பாலும் வழங்கி வரும் பாடம் வியாக்கியானத்தில் பாடாந்தரமாகக் கொள்ளப்பட்டுள்ளது.  “உவரி சூழ்ந்த நெடும்புணரி” என்றோதுக.  புணரி – அலைக்கும் கடலுக்கும் பெயர்; இங்கு அலையைச் சொல்லக்கடவது.  ‘நெடும்புணரி உவரி சூழ்ந்த சேமமதிள் சூழிலங்கை’ என்று அந்வயிப்பது.  உவரி – கடல் சேமம் – க்ஷேமம்.  சிரம், கரம் – வடசொற்கள்.

கண்ணன் மன்மதனுடைய அம்சமாகிய ப்ரத்யும்நனுக்கு ஜநகனாதலால் காமற்ப யந்தானாயினன்.

 

English Translation

O Hearth!  The Lord who came in the yore as a furtile, a man-lion, and a swan, is the Lord of the vedic fire sacrifice and the four yugas; he crossed over into the oean-girdled Lanka city and cut as under the heads and arms of the mighty Rakshasa king; he is the father of Madana, and resident of kannapuram. Come let us worship.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top