(1668)
கரையெடுத்த சுரிசங்கும் கனபவளத் தெழுகொடியும்,
திரையெடுத்து வருபுனல்சூழ் திருக்கண்ண புரத்துறையும்,
விரையெடுத்த துழாயலங்கல் விறல்வரைத்தோள் புடைபெயர
வரையெடுத்த பெருமானுக் கிழந்தேனென் வரிவளையே.
பதவுரை
|
கரை எடுத்த |
– |
கோஷத்தையுடைத்தாய் |
|
சுரி |
– |
வளைந்த |
|
சங்கும் |
– |
சங்குகளையும் |
|
கனம் |
– |
செறிந்திருக்கிற |
|
பவளத்து |
– |
பவழங்களினுடைய |
|
எழு |
– |
வளர்த்தியையுடைய |
|
கொடியும் |
– |
கொடிகளையும் |
|
திரை |
– |
அலைகளானவை |
|
எடுத்து வரு |
– |
அடித்துக்கொண்டு வரப்பெற்ற |
|
புனல் |
– |
ஜலத்தாலே |
|
சூழ் |
– |
சூழப்பட்ட |
|
திருக்கண்ணபுரத்து |
– |
திருக்கண்ணபுரத்திலே |
|
உறையும் |
– |
நித்யவாஸம் செய்தருள்பவனும் |
|
விரை எடுத்த |
– |
பரிமளம் மிகுந்த |
|
துழாய் அலங்கல் |
– |
திருத்துழாய் மாலையை யணிந்த தாய் |
|
விறல் |
– |
மிடுக்கையுடையதாய் |
|
வரை |
– |
மலைபோன்றதான |
|
தோள் |
– |
திருத்தோள் |
|
புடை பெயர |
– |
அசையும்படியாக |
|
வரை எடுத்த |
– |
கோவர்த்தனமலையை யெடுத்து (க்குடையாகப்) பிடித்தவனுமான |
|
பெருமானுக்கு |
– |
எம்பெருமானுக்கு |
|
என் வரி வளை |
– |
எனது அழகிய வளைகளை |
|
இழந்தேன் |
– |
இழந்துவிட்டேன். |
English Translation
Tirukkanapuram is lashed by the ocean that throws up great resounding conches and well grown coral branches. Here resides the Lord who wears a fragrant Tulasi garland and has strong arms that lifted a mountain. Alas, I have lost my beautify golden bangles to him.
