(1669)

(1669)

அரிவிரவு முகிற் கணத்தா னகில்புகையால் வரையோடும்

தெரிவரிய மணிமாடத் திருக்கண்ண புரத்துறையும்,

வரியரவி னணைத்துயின்று மழைமதத்த சிறுதறுகண்,

கரிவெருவ மருப்பொசித்தாற் கிழந்தேனென் கனவளையே.

 

பதவுரை

அரி

கறுப்பானது

விரவும்

கலந்து பரவப்பெற்ற

முகில் கணத்தால்

மேகக் கூட்டங்களாலும்

அகில் புகையால்

அகில் புகைகளாலும்

வரையோடும் தெரிவு அரிய

மலையோடு வாசியறிய வொண்ணாத

மணி மாடம்

மணிமயமான மாளிகைகளையுடைய திருக்கண்ணபுரத்து; உறையும் -;

வரி அரவு இன் அணை துயின்று

கோடுகளையுடைய ஆதிசேஷனாகிற போக்யமான படுக்கையிலே சயனிப்பவனாயும்

மழை மதத்த

மழைபோல் பெருகுகின்ற மதஜலத்தையுடையதும்

சிறு தறு கண்

சிறுத்த வட்டணித்த கண்களையுடையதுமான

கரி

குவலயா பீட மென்னும் யானை யானது

வெருவ

அஞ்சும்படியாக

மருப்பு

(அதன்) தந்தத்தை

ஒசித்தாற்கு

ஒடித்தொழித்தவனாயுமுள்ள பெருமானுக்கு

என் கனம் வளை

எனது பொன்வளைகளை

இழந்தேன்-.

 

English Translation

Tirukkanapuram has tall jewelled mansions that rise high and pierce the sky with their fridents, teasing the moon and the dark clouds.  Here resides the Lord who subdued seven bulls and rid the moon of its curse, joyously.  He is the adorable red eyed Senkanmal.  Alas, I have lost my beautiful golden bangles to him.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top