(16)

(16)

உறியை முற்றத்து உருட்டிநின் றாடுவார்

நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்

செறிமென் கூந்தல் அவிழத் திளைத்துஎங்கும்

அறிவ ழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே.

பதவுரை

ஆய்ப்பாடி

திருவாய்ப்பாடியிலுள்ள
ஆயர்

இடையர்கள்
உறியை

(பால் தயிர் சேமித்து வைத்த)உறிகளை
முற்றத்து

முற்றத்திலே
உருட்டி நின்று

உருட்டிவிட்டு
ஆடுவார்

கூத்தாடுவார் சிலரும்,
நறு

மணம்மிக்க
நெய் பால்தயிர்

நெய்யையும் பாலையும் தயிரையும்
நன்றாக

நிச்சேஷமாக
தூதுவார்

தாநம் பண்ணுவார் சிலரும்,
செறி மென்

நெருங்கி மெத்தென்றிருக்கிற
கூந்தல்

மயிர்முடியானது
அவிழ

அவிழ்ந்து கலையும்படி
திளைத்து

நர்த்தநம்பண்ணுவார் சிலருமாக,
எங்கும்

சேரியடங்கலும்
அறிவு அழிந்தனர்

தங்களூடைய விவேகம் ஒழியப் பெற்றனர்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – கண்ணன் பிறந்த ஸந்தோஷம் உள்ளடங்காமல், நெய்யும் பாலும் தயிருமிருக்கிற உறிகளை அறுத்துக் கொண்டுவந்து முற்றத்திலே உருட்டிவிட்டு ஆடினார்கள் சிலர்; நெய் பால் தயிர் முதலியவற்றை அபாரமாக தானஞ் செய்தார்கள் சிலர்; தலைமுடி அவிழ்ந்ததும் தெரியாமல் கூத்தாடினார்கள் சிலர் ஆகவிப்படி கோகுலத்து இடையர்கள் எல்லாரும் ஸந்தோஷப் பெருமையினால் இன்னதுதான் செய்வதென்று தெரியாமல் உன்மத்தரானார்கள்.

நன்றாகதூவுவார் என்றவிடத்து நன்று ஆக –  (பிள்ளைக்கு) நன்மையுண்டாகும்படி என்று முரைக்கலாம்.

English Translation

The cowherd -folk poured out good milk, curds and Ghee from rope-shelf, overturned the empty post in the portico and danced on them tossing their disheveled hair, and lost their minds.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top