(17)

(17)

கொண்ட தாளுறி கோலக் கொடுமழு

தண்டி னர்பறி யோலைச் சயனத்தர்

விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர்

அண்டர் மிண்டிப் புகுந்துநெய் யாடினார்.

பதவுரை

தான்கொண்ட

–

கால்நெருக்கத்தையுடைய
உறி

–

உறிகளையும்
கோலம்

–

அழகிய
கெரடு

–

கூர்மையான
மழு

–

மழுக்களையும்
தண்டினர்

–

கடிகளையுமுடையராய்
பறி

–

(தாழைமடலினின்றும்) பறிக்கப்பட்ட
ஓலை

–

ஓலைகளினாற்செய்த
சயனத்தர்

–

படுக்கையையுடையராய்
விண்ட

–

விசுஹித்த
முல்லை அரும்பு அன்ன

–

முல்லையரும்பு போன்ற
பல்லினர்

–

பற்களையுடையவரான
அண்டர்

–

இடையரானவர்கள்
மிண்டி

–

(ஒருவருக்கொருவர்) புகுந்து
நெய் ஆடினார்

–

நெய்யாடல் ஆடினார்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – ஜாதிக்குத் தகுந்தபடி உறியையும் மழுவென்னும் ஆயுதத்தையும் பசு மேய்க்கிற கோலையும் ஓலைப்பாயையும் உடையரான இடையர்கள் ஆநந்தத்தினால் தங்களுடைய பற்கள் வெளியே தோன்றும்படி சிரித்துக்கொண்டு நெருங்கிவந்து நின்று நெய்யாடலாடினார்கள்.  நெய்யாடலாவது  – ஸந்தோஷ ஸூசகமாக எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஒருவரோடொருவர் தழுவி நின்று ஆடும் ஆட்டம்; எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஸ்நானஞ் செய்தலுமாம்.

‘‘விண்டின் முல்லை’’ என்றும் பாடமுண்டாம்; விண்டு –  மலை; மலை முல்லையரும்பு நெருங்கிய பூத்தாற்போலேயிருக்கிற (வெண்ணிறமான) பற்களையுடையர் என்றபடி, அண்டர் –  இடையர்களும் தேவர்களும்; இங்கு இடையர்களைச் சொல்லுகிறது.

English Translation

Forest-dwellers came pouring in, with teeth as white as the fresh Mullai blossom, wearing woven bark cloth, carrying a staff, an axe, and a sleeping mat woven from screw pine fibre; they smeared themselves with Ghee and danced.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top