(15)

(15)

பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்

காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார்

ஆணொப் பார்இவன் நேரில்லை காண்திரு

வோணத் தானுல காளுமென் பார்களே.

பதவுரை

சீர் உடை

ஸ்ரீமானான
பிள்ளை

க்ருஷ்ணன்
பேணி

(கம்ஸாதிகள் கண்படாதபடி தன்னைக்) காத்து வந்து
பிறந்தினில்

பிறந்தவளவில்
தாம்

ஆடிப்பாடி ஆயர்கள்
காண

(கண்ணனைக்) காண்கைக்காக
புகுவார்

உள்ளே நுழைவாரும்
புக்கு

உள்ளேபோய் (சுருண்டு)
போதுவார்

வெளிப்புறப்படுவாரும்,
ஆண் ஒப்பார்

‘‘ஆண்தன்மையொத்திருப்பவர்களில்
இவன் நேர்

இவனோடு ஒத்திருப்பார்
இல்லை

(யாரும்) இல்லை; (இவன்)
திரு ஓணத்தான்

ச்ரவண நக்ஷரத்தில் அவதரித்த ஸர்வேச்வரனுடைய
உலகு

விபூதிகளையெல்லாம்
ஆளும்

ஆளக்கடவன்’’
என்பார்கள்

என்று சொல்லுவாருமாக ஆனார்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – கண்ணபிரான் அவதரித்த காலத்தில் கோகுலத்தவர்கள் அந்தக் குழந்தையைப் பார்க்க நந்தகோபர் திருமாளிகையிற் புகுந்துகொண்டும், புகுந்து பார்த்தவர்கள் வெளியில் புறப்பட்டு வந்துகொண்டும், அவர்களில்  ஸாமுத்ரிக சாஸ்த்ரம் தெரிந்தவர்கள் ‘இவன் எல்லாரைக்காட்டிலும் விலக்ஷண புருஷன் என்னும்படியாக லக்ஷணங்கள் அமைந்திருப்பதனால் இவன் உபய விபூதி நிர்வாவஹனாயிருப்பான்’ என்று சொல்லிக் கொண்டும் இருந்தார்கள்.

கண்ணபிரான் பிறக்கும்போது சங்கு சக்கரங்களுடனே தோன்றக்கண்ட தேவகீ வஸுதேவர்கள் ‘இந்த ரூபத்தைக் கம்ஸன் தெரிந்து கொள்ளாதபடி மறைத்துக்கொள்’ என்று பிரார்த்திக்க, அப்படியே தாய் தந்தையருடைய சொல்லைப் பரிபாலித்து, அக்காலத்தில் கம்ஸனால் நேரக்கூடிய ஆபத்தில் நின்றும் தப்பினபடியால், ‘பேணி’ என்றும், ‘சீருடைப்பிள்ளை’ என்றும் அருளிச் செய்தார்.  சொன்னபடி கேட்கிற பிள்ளையன்றோ சீருடைப்பிள்ளை.  பேணி என்பதற்கு – ஆசைப்பட்டுக் கொண்டு என்றும், தன்னை மறைத்துக்கொண்டு என்றும் பொருள் சொல்லலாம்.

ஆண் ஒப்பார் இவன் நேரில்லை – லோகத்திலுள்ளவர்கள் ஆண் என்கிற தன்மையில் மாத்திரம் இவனை யொத்திருக்கிறார்களே யொழிய, மற்றபடி திருமேனி ஸந்நிவேசம் முதலானவற்றில் இவனுக்கு ஒப்பானவர்கள் இல்லையென்கை.  ‘‘ஆணொப்பான்’’ என்று பாடமாகில், ஆண்களுக்கு உரிய லக்ஷணத்தால் என்று பொருளாம் ஆன்விகுதி -மூன்றாம் வேற்றுமையுருபு.

‘‘திருவோணத்தானுலகு’ என்று ஆறாம்வேற்றுமைத் தொகையாகக் கொள்ளாமல் ‘திருவோணத்தான்’ என்றும் ‘உலகாளும்’ என்றும் இரண்டு வாக்கியமாகப் பிரித்துக்கொண்டு, இப்படியிருப்பதால் இவன் திருவோணத்தானாகிய திருமாலேயாவன், உலகங்களையும் ஆள்வன் என்பதாகவுமுரைக்கலாம்.  ஆளும் – செய்யுமென்னும் வாய்பாட்டு வினைமுற்று ஆண்பாலுக்கு வந்தது.

English Translation

Soon after the protected child was born they poured into the nursery to see him, and came out saying, “He has no match!”,”He shall rule the Earth!”, “Tiruvonam is his star!”.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top