(1401)
வளர்ந்தவனைத் தடங்கடலுள் வலியுருவில் திரிசகடம்,
தளர்ந்துதிர வுதைத்தவனைத் தரியாதன் றிரணியனைப்
பிளந்தவனை, பெருநிலமீ ரடிநீட்டிப் பண்டொருநாள்
அளந்தவனை, யான்கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே,
பதவுரை
|
தடங் கடலுள் வளர்ந்தவனை |
– |
விசாலமான கடலிலே திருக்கண் வளர்ந்தருளபவனும் |
|
வலி உருவின் திரி சகடம் |
– |
வலிவுள்ள சரீரத்தை யுடைத்தாய்க்கொண்டு ஊர்ந்து வந்த (அஸுரனாலாவேசிக்கப்பட்ட) சகடமானது |
|
தளர்ந்து உதிர உதைத்தவனை |
– |
கட்டுக்குலைந்து சிந்நாபிந்நமாகும்படி (அதனைத்) திருவடியால் உதைத்தவனும் |
|
அன்று தரியாது இரணியனை பிளந்தவனை |
– |
ஒருகாலத்தில் பொறுத்திருக்கமாட்டாமல் இரண்யாசுரனைக் கிழித்துப்போட்டவனும், |
|
பண்டு ஒருகால் |
– |
மற்றுமொருகாலத்தில் |
|
ஈர் அடி நீட்டி |
– |
இரண்டு திருவடிகளைப் பரப்பிவைத்து |
|
பெருநிலம் அளந்தவனை |
– |
விசாலமான பூமியை யெல்லாம் அளந்து கொண்டவனுமான பெருமானை |
|
யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே–. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
` ***- இரண்டாமடியில் ‘உதிர’ என்றும் ‘அதிர’ என்றும் பாடபேதமுண்டு; அதிர – அதிர்ச்சியுண்டாம்படி.
தரியாது – தன்விஷயத்திலே எத்தனை தீங்குசெய்தாலும் தரித்திருப்பன் எம்பெருமான்; தனது உயிர்நிலையான அடியவர் திறத்தில் தீங்கு செய்தால் ஒருநொடிப்பொழுதும் தரித்திருக்கமாட்டானென்க.
English Translation
The Lord who reclines in the ocean, the Lord who smote a bedevilled cart to smithers, the one who tore Hiranya’s chest, the one who came as a manikin, then grew and took the Earth, -I have seen him in Southern Arangam amid cool waters.
