(1411)
மாயிருங் குன்ற மொன்றுமத் தாக மாசுண மதனொடும் அளவி,
பாயிரும் பௌவம் பகடுவிண் டலறப் படுதிரை விசும்பிடைப் படர,
சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாமுடன் திசைப்ப,
ஆயிரந் தோளா லலைகடல் கடைந்தான் அரங்கமா நகரமர்ந் தானே,
பதவுரை
|
மா இரு குன்றம் ஒன்று |
– |
அகன்றும் உயர்ந்துமிருக்கிற (மந்தரமென்னும்) ஒருமலையை |
|
மத்து ஆக |
– |
மத்தாகக்கொண்டு |
|
அதனொடும் |
– |
அம்மலையிலே |
|
மாசுணம் |
– |
(வாஸுகியென்னும); நாகத்தை |
|
அளவி |
– |
சுற்றி, |
|
பா இரு பௌவம் |
– |
பரந்தும் நீண்டுமிருக்கிற ஸமுத்ரம். |
|
பகடு விண்டு அலற |
– |
யானைபிளிறுமா போலே பிளிறவும் |
|
படு திரை |
– |
உண்டான அலைகள் |
|
விசும்பிடை படர |
– |
ஆகாசத்திலே சென்றுகிட்டி வியாபிக்கவும் |
|
சே இரு விசும்பும் |
– |
மிக்க உயரத்திலுள்ள ஸ்வர்க்காதி லோகங்களும் |
|
திங்களும் |
– |
சந்திரமும் |
|
சுடரும் |
– |
(மற்றுமுள்ள) தேஜஸ் பதார்த்தங்களும் |
|
தேவர் தாமும் |
– |
தேவதைகளும் |
|
உடன் |
– |
எக்காலத்திலே |
|
திசைப்ப |
– |
ஆச்சரியப்படவும் |
|
அலைகடல் |
– |
அலையெறிகின்ற கடலை |
|
ஆயிரம் தோளால் |
– |
பல திருக்கைகளினால் |
|
கடைந்தான் |
– |
கடைந்தருளினவன் |
|
அரங்கம் மா நகர் அமர்ந்தான் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பகடு விண்டு அலற – ‘பகடு’ என்னுஞ் சொல்லுக்கு உள்ள பல பொருள்களில் ‘யானை’ என்னும் பொருள் இங்குக்கொள்ளவுரியது. உவமவுருபு தொக்கியிருக்கின்றதென்க. விண்டுவாய்விரிந்து.
“ஆயிரந்தோளால் அலைகடல் கடைந்தான்” என்கிறாரே, இப்படி உண்டோ? என்னில்; “நாலு தோள்கொண்டு வ்யாபரித்தபடிதான் ஆயிரந் தோள்கொண்டு வ்யாபரித்தான் என்னலாம்படியாய்த்து” என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்திகண்டு தெளிக.
English Translation
Rolling the big serpent Vasuki over the big mountain Mandara, the Lord churned the ocean with a thousand arms. The ocean opened its mouth and roared, the waves splashed sky-high. The heavens, the Sun, the Moon, the gods and the celestials, all witnessed the wonder spell-bound. He is the resident of Arangama-Nagar.
