(1398)

(1398)

கைம்மான மழகளிற்றைக் கடல்கிடந்த கருமணியை,

மைம்மான மரகதத்தை மறையுரைத்த திருமாலை,

எம்மானை எனக்கென்று மினியானைப் பனிகாத்த

வம்மானை, யான்கண்ட தணிநீர்த் தென் னரங்கத்தே,

 

பதவுரை

மானம் கை மழ களிற்றை

நீண்ட கையையுடைய இளமைதங்கிய யானை போன்றவனும்

கடல் கிடந்த கருமணியை

கடலிலே கண்வளர்ந்தருள்கிற நீலமணி போன்றவனும்

மை மானம் மரதகத்தை

பசுமை நிறம் மிக்கிருக்கப் பெற்ற மரகதப் பச்சை போன்றவனும்

மறை உரைத்த திருமாலை

வேதங்களாலே பிரதிபாதிக்கப்பட்ட ச்ரியபேதியானவனும்

எம்மானை

எனக்கு ஸ்வாமியானவனும்

எனக்கு என்றும் இனியானை

எனக்கு எக்காலத்திலும் போக்யனா யிருப்பவனும்

பனி காத்த அம்;மானை

மழையில் நின்றும் (ஆநிரையைக்) காத்தருளினவனுமான பொருமானை

யான் கண்டது

அடியேன் ஸேவிக்கப்பெற்றது (எவ்விடத்திலென்னில்)

அணிநீர் தென்அரங்கத்து

அழகிய தீர்த்தம்பொருந்திய திருவரங்கத்திலே.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆழ்வார் கீழ்த்திருமொழியில் பட்ட வ்யதைமெல்லாத் தீர்ந்து மகிழ்ந்து பேசுந்திருமொழியாயிற்று இது என்னாதனைத் திருவரங்கத்தில் காணப்பெற்றேன் என்கிறார்.

கைம்மான மழகளிற்றை = ஓர் ஆனை கைகளையும் கால்களையும் பரப்பிக்கொண்டு கிடப்பதுபோலப் பள்ளிகொண்டிருக்கும் அழகில் ஈடுபட்டுச் சொல்லுகிறபடி.  நீண்ட துதிக்கையை யுடையதாய்ப் பருவத்தாலே இளையதாயிருப்பதொரு ஆனை சாய்ந்தாற்போலே யிருக்கின்றவனையென்கை.  “களிறுபோன்றவனை” என்னாது களிற்றை என்றது ஐக்கியமாகச் சொன்னது உவமையாகுபெயர்.

கடல்கிடந்த கருமணியை – ஒரு நீலரத்னம் சாய்ந்தாற்போலே திருப்பாற்கடலிலே கிடந்தவனை என்கை.  மைம்மான மரதகத்தை – பசுமை, நீலம், கருமை என்ற நிறங்களை அபேதமாகக் கூறுவது கவி மரபாதலால் எம்பெருமானுடைய காளமேகத் திருவுருவத்திற்குக் கருமணியையும் மரதகத்தையும் உவமை கூறினர்.  மறையுரைத்த என்பதற்கு – ‘வேதங்களை உபதேசித்தருளின’ என்றும் வேதங்களால் பிரதிபாதிக்கப்பட்ட’ என்றும் இரண்டுவகையாகப் பொருள் ஆகும். பிந்தினபொருள் பாங்கு

 

English Translation

The elephant cub, that black gem who reclines in the ocean, the dark emerald, the Vedic Lord, my master, my always-sweet-to-me-Lord, the Lord who stopped a hailstorm, -I have seen him in Southern  Arangam amid cool waters.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top