(131)
கஞ்சன்தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச்சகடு கலக்கழிய
பஞ்சியன்ன மெல்லடியால் பாய்ந்தபோது நொந்திடுமென்று
அஞ்சினேன்காண் அமரர்கோவே ஆயர்கூட்டத் தளவன்றாலோ
கஞ்சனைஉன் வஞ்சனையால் வலைப்படுத்தாய் முலையுணாயே.
பதவுரை
| அமரர் கோவே |
– |
தேவர்களுக்குத் தலைவனே! (நீ) |
| கஞ்சன் தன்னால் |
– |
கம்ஸனாலே |
| புணர்க்கப்பட்ட |
– |
(உன்னைக் கொல்வதற்காக) ஏற்படுத்தப்பட்ட |
| கள்ளச்சகடு |
– |
க்ருத்ரிம சகடமானது |
| கலக்கு அழிய |
– |
கட்டு (க்குலைந்து உருமாறி) அழிந்துபோம்படி |
| பஞ்சி அன்ன மெல் அடியால் |
– |
பஞ்சைப்போன்ற ஸஜகுமாரமான உன் திருவடிகளினால் |
| பாய்ந்தபோது |
– |
உதைத்தபோது |
| நொந்திடும் என்று |
– |
(உன் திருவடிகளுக்கு) நோவுண்டாகுமேயென்று |
| அஞ்சினேன் காண் |
– |
பயப்பட்டேன் காண்; |
|
(என்னுடைய அச்சம்) |
||
| ஆயர் கூட்டத்து அளவு அன்று ஆல் |
– |
இடையர் திரளினுடைய (அச்சத்தின்) அள்வல்ல காண்; |
| கஞ்சனை |
– |
(உன்னைக் கொல்வதற்காக மிக்க வஞ்சனைகளைச்செய்த) கம்ஸனை |
| உன் வஞ்சனையால் |
– |
உன்னுடைய வஞ்சனையினாலே |
| வலைப்படுத்தாய் |
– |
(உன்கையிற்) சிக்கும்படி செய்து கொன்றவனே! |
|
முலை உணாய். |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – (அஞ்சினேன் இத்யாதி) “பெற்றவளுக்கன்றோ தெரியும் பிள்ளையினருமை” என்றபடி உன்னைப் பெற்றதாயான எனக்குத்தான் உன் அருமை தெரியுமாதலால் மற்றை இடையர் திரளின் அச்சமெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் நான் ‘உனக்கு ஏதேனும் தீங்கு நேரிடுமோ!’ என்று கொண்டுள்ள அச்சத்திற்கு ஒப்பாகாது என்றபடி. காண் – முன்னிலையசை; தேற்றப்பொருள் தரும். ஆல் – தேற்றம்; ஓ – இரக்கம். பஞ்சி – பஞ்சு; கடைப்போலி.
English Translation
O King of eternals! You caught Kamsa with your tricks and killed him. The devilish cart incited by him broke to smithers when you smote it with your cotton soft feet. My fear that it may have hurt you, alas, was more than all the cowherd clan’s. Take suck from my breasts.
