(132)

(132)

தீயபுந்திக் கஞ்சன்உன்மேல் சினமுடையன் சோர்வுபார்த்து

மாயந்தன்னால் வலைப்படுக் கில்வாழகில்லேன் வாசுதேவா

தாயர்வாய்ச்சொல் தருமம்கண்டாய் சாற்றிச்சொன்னேன் போகவேண்டா

ஆயர்பாடிக் கணிவிளக்கே அமர்ந்துவந்துஎன் முலையுணாயே.

பதவுரை

வாசுதேவா

கண்ணபிரானே!
தீய புந்தி

துஷ்டபுத்தியையுடைய
கஞ்சன்

கம்ஸனானவன்
உன் மேல்

உன் பக்கலிலே
சினம் உடையவன்

கோபங்கொண்டவனாயிரா நின்றான்;
சோர்வு பார்த்து

(நீ) தனியாயிருக்கும் ஸமயம்பார்த்து
மாயம் தன்னால்

வஞ்சனையால்
வலைப்படுக்கில்

(உன்னை) அகப்படுத்திக் கொண்டால்
வாழகில்லேன்

(நான்) பிழைத்திருக்க சக்தையல்லேன்;
தாயர்

தாய்மார்களுடைய
வாய் சொல்

வாயினாற் சொல்லுவது
கருமம் கண்டாய்

அவச்யகர்த்தவ்ய கார்யமாகும்;
சாற்றி சொன்னேன்

வற்புறுத்திச் சொல்லுகிறேன்;
போக வேண்டா

(நீ ஓரிடத்திற்கும்) போகவேண்டா;
ஆயர்பாடிக்கு

திருவாய்ப்பாடிக்கு
அணி விளக்கே

மங்களதீபமானவனே!
அமர்ந்து வந்து

பொருந்தி வந்து

என் முலை உணாய்

.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – தேவகியின் மக்களறுவரைக் கல்லிடை மோதி சிசுஹத்திசெய்த கொடிய கம்ஸன் ‘தேவகியின் எட்டாவது கர்ப்பம் உனக்குப் பகை’ என்ற ஆகாயவாணியினாலும் பின்பு துர்க்கை சொல்லிப் போனதனாலும் ‘நம் பகைவன் கை தப்பிப்போய் நமக்கு அணுகவொண்ணாத இடத்திலே வளரா நின்றான்; அவனை எப்படியாவது கண்டுபிடித்துக் கொன்றுவிடவேணும்’ என்று உன்மேல் மிகவும் கறுக்கொண்டு ஆஸுர ப்ரக்ருதிகளை ஸ்தாவர ஜங்கமங்களான வடிவுகளைக்கொண்டு நீ திரியுமிடங்களில் நிற்கும்படி ஏவியிருக்கிறான்!  அவன் அவர்களைக்கொண்டு நீ துணையற்றுத் திரியும்போது பார்த்து உனக்குத் தெரியாமலே தப்பமுடியாதபடி வஞ்சனையால் உன்னைப் பிடித்துக் கொண்டால் பின்னை என்னால் உயிர் தரித்திருக்க முடியாது; என் பேச்சைப் பேணி இங்கேயே இருக்கக் கடவாய் என்று வற்புறுத்துகின்றாள்.  (அணிவிளக்கே) உனக்கு ஏதேனும் தீங்குவந்தால் இத்திருவாய்ப்பாடியடங்கலும் இருள் மூடிவிடுங்காணென்கிறாள்.  சோர்வு – தளர்ச்சி; இலக்கணையால் தனிப்பட்டிருத்தலைக் காட்டும்.  கருமம் – ??  அமர்ந்து உவந்து என்றும் பிரிக்கலாம்.

English Translation

O Vasudeva! The evil-minded Kamsa is angry with you.  When you are alone he will capture you by deceit.  I will not live thereafter.  Mother’s words must always be heeded.  I repeat, do not go out to play.  O Beacon of the cowherd clan, come sit and take suck.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top