(130)

(130)

தந்தம்மக்கள் அழுதுசென்றால் தாய்மாராவார் தரிக்ககில்லார்

வந்துநன்மேல் பூசல்செய்ய வாழவல்ல வாசுதேவா

உந்தையார்உந் திறத்தரல்லர் உன்னைநானொன் றுரப்பமாட்டேன்

நந்தகோப னணிசிறுவா நான்சுரந்த முலையுணாயே.

பதவுரை

தம் தம் மக்கள்

தங்கள் தங்கள் பிள்ளைகள்
அழுது

அழுதுகொண்டு
சென்றால்

(தம்தம் வீட்டுக்குப்) போனால்
தாய்மார் ஆவார்

(அக்குழந்தைகளின்) தாய்மார்கள்
தரிக்க கில்லார்

பொறுக்க மாட்டாதவர்களாய்
வந்து

(தம் குழந்தைகளை அழைத்துக்) கொண்டு வந்து
நன்மேல் பூசல்செய்ய

உன்மேல் பிணங்க
வாழவல்ல

(அதைக்கண்டு) மகிழவல்ல
வாசுதேவா

கண்ணபிரானே!
உந்தையார்

உன் தகப்பனார்.
உன் திறத்தர் அல்லர்

உன் விஷயத்தைக் கவனிப்பவரல்லர்;
நான்

(அபலையான) நானும்
உன்னை

(தீம்பில் ………………..) உன்னை
ஒன்று உரப்ப மாட்டேன்

சிறிதும அதட்ட வல்லமை யற்றிராநின்றேன்;

(இவையெல்லாங் கிடக்க)

நந்தகோபன்

நந்தகோபருடைய
அணி சிறுவா

அழகிய சிறுபிள்ளாய்!
நான் சுரந்த முலை

எனது பால் சுரந்திருக்கிற முலையை
உணாய்

உண்பாயாக.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – கண்ணபிரான் தன்னோராயிரம் பிள்ளைகளோடு விளையாட போனால் எல்லாப் பிள்ளைகளையும் போல விராமல் அப்பிள்ளைகளை அடித்துக் குத்தி விளையாடுவனாதலால் அழுதுகொண்ட வீட்டுக்குச் செல்லும் அப்பிள்ளைகளைக் கண்ட தாய்மார்கள் மனம் பொறாமல் நொந்து அப்பிள்ளைகளைக் கண்ணுங் கண்ணீரும்  அழைத்துக் கொண்டுவந்து காட்டி இவன்மேலே பழி சொல்லிப் பிணங்கினால் இவன் அதனால் சற்றும் இளைப்புக் கொள்ளாமல் அதையே த்ருப்தியாகக் கொண்டு ஸந்தோஷிப்பனென்பதைக் காட்டுகிறார் – முதலிரண்டடியால் (வாசுதேவா) பசுவின் வயிற்றிலே புலி பிறந்ததீ! யென்கிறார்.  உன் + தந்தையார் = உந்தையார்; மரூஉ மொழி.

English Translation

The mothers can’t stand it when their children return home wailing; they come here and complain about you.  O Vasudeva who lives as you wish, your father doesn’t correct your ways; nor am I able do anything.  O little child of Nandagopa, my breasts are laden; go ahead and take suck!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top