(129)

(129)

வைத்தநெய்யும் காய்ந்தபாலும் வடிதயிரும் நறுவெண்ணெயும்

இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான்நீ பிறந்தபின்னை

எத்தனையும் செய்யப்பெற்றாய் ஏதும்செய்யேன் கதம்படாதே

முத்தனைய முறுவல்செய்து மூக்குறுஞ்சி முலையுணாயே.

பதவுரை

எம் பிரான்

–

எமது உபகாரகனே!
வைத்த நெய்யும்

–

உருக்கி வைத்த நெய்யும்
காய்ந்த பாலும்

–

(ஏடு மிகுதியாகப் படியும்படி) காய்ந்த பாலும்
வடி தயிரும்

–

(உள்ளநீரை) வடித்துக் கட்டியாயிருக்கிற தயிரும்
நறு வெண்ணெயும்

–

மணம்மிக்க வெண்ணெயும்
இத்தனையும்

–

(ஆகிய) இவையெல்லாவற்றையும்
நீ பிறந்தபின்னை

–

நீ பிறந்த பிறகு
பெற்று அறியேன்

–

கண்டதில்லை;
எத்தனையும்

–

(நீ) வேண்டிணபடியெல்லாம்
செய்யப்பெற்றாய்

–

நீ செய்யலாம்;
எதும் செய்யேன்

–

(அப்படி நீ செய்வதற்காக நான் உன்னை) ஒன்றும் செய்யமாட்டேன்;
கதம் படாதே

–

நீ கோபியாதே கொள்;
முத்து அனைய முறுவல் செய்து

–

முத்தைப்போல் வெண்ணிறமாக மந்தஸ்மிதம்பண்ணி
மூக்கு உறிஞ்சி

–

மூக்கை உறிஞ்சிக்கொண்டு
முலை உணாய்

–

முலை உண்பாயாக.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – இத்தனையும் பெற்றறியேன் – (நொய் பால் முதலியவற்றில்) சிறிதும் சேத்திருக்கக் கண்டிலேன் என்றுமாம்.  கதம் – கோபம்.  குழந்தைகள் மூக்குறிஞ்சி முலையுண்ணுதல் – இயல்பு.

English Translation

My master, ever since you were born, I know not where all the saved Ghee, boiled milk, drained curds and fresh butter went.  You go on doing what you want; I do nothing lest I anger you.  Making a pearly smile, sniffing your nose, go ahead and take suck!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top