(1207)
மையிலங்கு கருங்குவளை மருங்கலரும் வயலாலி,
நெய்யிலங்கு சுடராழிப் படையானை நெடுமாலை,
கையிலங்கு வேல்கலியன் கண்டுரைத்த தமிழ்மாலை,
ஐயிரண்டு மிவைவல்லார்க் கருவினைக ளடையாவே.
பதவுரை
|
கை இலக்கு வேல் கலியன் |
– |
கையில் விளங்குகின்ற வேலையுடைய திருமங்கையாழ்வார், |
|
மை இலங்கு கரு குவளை |
– |
மைபோல் விளங்குகின்ற கறுத்த குவளை மலர்கள் |
|
மருங்கு அலரும் வயல் |
– |
ஸமீபங்களிலே விகஸிக்கப் பெற்ற கழனிகளையுடைய |
|
ஆலி |
– |
திருவாலியிலே இருக்கிற |
|
நெய் இலங்கு சுடர் ஆழி |
– |
நெய் பூசப்பட்டு விளங்குகின்றதும் சுடரையுடையதுமான |
|
படையானை |
– |
சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டுள்ள |
|
நெடு மாலை |
– |
ஸர்வேச்வரனை |
|
கண்டு உரைத்த |
– |
ஸேவித்துக் சொன்ன |
|
தமிழ் மாலை |
– |
தமிழ்த் தொடைகளான |
|
இவை ஐ இரண்டும் |
– |
இப்பத்துப் பாசுரங்களையும் |
|
வல்லார்க்கு |
– |
ஓதவல்லவர்களுக்கு |
|
அரு வினைகள் |
– |
துஷ்கருமங்கள் |
|
அடையா |
– |
சேரமாட்டா. |
English Translation
The spear-wielding Kaliyan of fertile Tiruvali,–where dark blue water lilies fill the lakes, — has sung this garland of sweet Tamil songs on seeing the Lord who wields the sharp-edged discus. Those who master it shall have no bad Karmas.
