(1135)
குடைத்திறல் மன்னவ னாயொருகால் குரங் கைப்படை யா,மலை யால்கடலை
அடைத்தவ னெந்தைபி ரானதி டம்மணி மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி,
விடைத்திறல் வில்லவன் நென்மெலியில் வெருவச்செரு வேல்வலங் கைப்பிடித்த,
படைத்திறல் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே.
பதவுரை
|
ஒரு கால் |
– |
முன்னொரு காலத்தில், |
|
குடை திறல் மன்னவன் ஆய் |
– |
வெண் கொற்றக்குடையையும் பெரு மிடுக்கையுமுடைய சக்ரவர்த்தி திருமகனாய் (அவதரித்து) |
|
குரங்கை |
– |
வாநர வீரர்களை |
|
படையா |
– |
ஸேனையாகக்கொண்டு |
|
மலையால் |
– |
மலைகளினால் |
|
கடலை |
– |
தெற்கு ஸமுத்ரத்தை |
|
அடைத்தவன் |
– |
அணைகட்டி யடைத்தவனான |
|
எந்தை பிரானது |
– |
எம்பெருமானுக்கு |
|
இடம் |
– |
இருப்பிடமாவது, |
|
அணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி–; |
||
|
நென் மெலியில் |
– |
நென்மெலி யென்னும் நகரத்தில் |
|
விடை திறல் |
– |
காளையின் வலிவுபோன்ற வலிவையுடையனான |
|
வில்லவன் |
– |
வில்லவனென்கிற அரசன் |
|
வெருவ |
– |
அஞ்சி நடுங்கும்படி |
|
செரு வேல் |
– |
யுத்தத்திற்குக் கருவியான வேற்படையை |
|
வலம் கை பிடித்த |
– |
வலக்கையிலே பிடித்தவனும் |
|
படை திறல் |
– |
ஆயதங்களை ஆளத்தக்க மிடுக்கை யுடையனுமான |
|
பல்லவர் கோன்–; |
||
|
பணிந்த–; |
||
|
பரமேச்சுரவிண்ணகரம் அதுவே–. |
||
English Translation
Then in the yore the lord come as a crowned king and commanded a monkey army and built a bridge over the ocean with rocks. He is our Lord, resident of beautiful Kanchi with mansions. The bull-like bow-wielding Pandya warrior of Nenmeli fell into jitters when our Pallava king wielded the sharp spear in his right hand. He comes to offer worship in the temple of Paramecchura Vinnagaram.
