(1134)
இலகிய நீண்முடி மாவலி தன்பெரு வேள்வியில் மாணுரு வாய்முனநாள்,
சலமொடு மாநிலங் கொண்டவ னுக்கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
உலகுடை மன்னவன் தென்னவனைக் கன்னி மாமதிள் சூழ்கரு வூர்வெருவ,
பலபடை சாயவென் றான்பணிந் தபர மேச்சுர விண்ணக ரமதுவே.
பதவுரை
|
முன நாள் |
– |
முன்னொருகால், |
|
இலகிய நீள் முடி |
– |
விளங்காநின்ற நீண்ட கிரிடத்தையுடைய |
|
மாவலி தன் |
– |
மஹாபலியினது |
|
பெரு வேள்வியில் |
– |
பெரிய யாகத்திலே |
|
மாண் உரு ஆய் |
– |
வாமந ரூபியாய் (சென்று) |
|
சலமொடு |
– |
கபடமான வகையாலே |
|
மா நிலம் கொண்டவனுக்கு |
– |
உலகத்தையெல்லாம் ஆக்ரமித்துக்கொண்ட பெருமானுக்கு |
|
இடம் |
– |
இருப்பிடமாவது |
|
தடம் சூழ்ந்து அழகாய கச்சி–. |
||
|
கன்னி மா மதிள் சூழ் கருவூர்வெருவ |
– |
அழிவில்லாத பெரிய மதிள்களாலே சூழப்பட்ட கருவூர்என்னும் நகரம் நிலைகலங்கவும் |
|
பல படை சாய |
– |
சதுரங்க ஸேனை முடியும்படியாகவும், |
|
உலகு உடை மன்னவன் தென்னவனை வென்றான் |
– |
உலகங்களை அடிமையாகவுடைய அரசனாயிருந்த பாண்டியனை வென்ற பல்வவன் |
|
பணிந்த–; |
||
|
பரமேச்சுரவிண்ணகரம் அதுவே. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- சலமொடு-‘ஜலம்’ என்ற வடசொல் சலமெனத் திரிந்ததென்று கொண்டால். மாவலியானவன் தத்தம் பண்ணுதற்காக விட்ட நீர்த்தாரையுடனே என்று பொருளாம்: ‘‘ரு’ என்ற வடசொல் சலமெனத் திரிந்ததென்று கொண்டால் க்ருத்ரிமவகையினால் என்றதாகிறது. சிறிய வடிவைக் காட்டிப் பெரிய வடிவாலே அளந்துகொண்ட க்ருத்ரிமம்.
பாண்டியராஜனுடைய நகரங்களுள் ஒன்றான கருவுடையும் பல்லவராஜன் வென்று கைக்கொண்டபடியைப் பின்னடிகளில் பேசினாராயிற்று.
English Translation
The Lord who went as a manikin to the sacrifice of the radiant tall-crown Mabali and took the Earth and all as a gift, resides in beautiful Kanchi amid water-tanks. The great Pandya king; – ruler of the vast southern kingdom, who has a strong army and many cities with high wall, – was routed by our Palava king, who comes to offer worship in the temple of Paramecchura Vinnagaram.
