(1133)

(1133)

திண்படைக் கோளரி யினுரு வாய்த் திறலோனக லம்செரு வில்முனநாள்,

புண்படப் போழ்ந்த பிரானதிடம் பொரு மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி,

வெண்குடை நீழல்செங் கோல்நடப் பவிடை வெல்கொடி வேற்படை முன்னுயர்த்த,

பண்புடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே.

 

பதவுரை

முனநாள்

–

முன்னொரு காலத்திலே

திண் படை

–

கூர்மையான (நகங்களாகிற) ஆயதங்களையுடைய

கோள் அரியின் உரு ஆய்

–

வலிமிக்க நரஸிம்ஹ மூர்த்தியாய்த் தோன்றி

செருவில்

–

போர்க்களத்தில்

திறலோன் அகலம்

–

மஹாபலசாலியான இரணியனது மார்வை

புண் பட போழ்ந்த

–

புண்படும்படி கிழித்தெறிந்த

பிரானது

–

எம்பெருமானுக்கு

இடம்

–

இருப்பிடமாவது,

பொரு மாடங்கள் சூழ்ந்து

–

ஒன்றோடொன்று சேர்ந்திருக்கிற மாடங்கள் நிறைந்திருப்பதனால்

அழகாய

–

அழகுபொலிந்திருக்கிற

கச்சி

–

கச்சிப்பதியிலே,

வெண் குடை நீழல்

–

வெண் கொற்றக்குடையின் நிழலில் (வீற்றிருந்துகொண்டு)

செங்கோல் நடப்ப

–

தனது கட்டளை விலைச்செல்லும்;படி (அரசாண்டவனும்)

விடம் வெல் கொடி

–

பாம்பாகிற வெற்றிக்கொடியையும்

வேல் படை

–

வேல் என்னு மாயுதத்தையும்

முன் உயர்த்த

–

சேனைகளின்முன்னே உயர எடுத்தவனும்

பண்பு உடை

–

நீதி தவறாதவனுமான

பல்லவர் கோன்–:

பணிந்த-:

பரமேச்சுரவிண்ணகரம் அதுவே–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பல்லவராஜனுடைய பெருமேன்மையைப் பேசுகிற மூன்றாமடியின் பிற்பகுதியில்“விடவெல் கொடி” என்றும்,  “விடை வெல்கொடி” என்றும், “விறல் வெல்கொடி” என்றும்மூன்று வகையான பாடங்கள் உள்ளனவாக வியாக்கியானம் காண்கிறது.  முந்தின பாடத்தில்விடம் என்றது விஷமுடைத்தான நாகத்தைச் சொன்னபடியாய் நாகக்கொடியோன் என்றதாகிறது.

இரண்டாவது பாடமே பெரும்பான்மையாக வழங்குகின்றது:  விடை என்று இளம் பாம்புக்கும் பெயருண்டென்று பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்கிறார்.  எருது என்னும் பொருளையேகொண்டாலும் குறையில்லை:  பல்லவனுக்கு ஆதிகாலமாக விருஷபக்கொடி இருந்ததென்றும், பின்பு நாகலோகத்தளவுஞ் சென்று வென்றுவந்தது காரணமாக நாகக்கொடி உண்டாயிற்றென்றும் வரலாறு உள்ளதாகச் சொல்லக் கேள்வியுண்டு,

திண்படை – நரஸிம்ஹமூர்த்திக்கு நகங்கள் தவிர வேறு ஆயதமொன்று மில்லாமையினால் அந்த நகங்களையே இங்குத் திண்படை யென்கிறார்.

 

English Translation

The strong man-lion form wielded weapons that destroyed the mighty chest of Hiranya in a fierce fight. He resides in Kanchi surrounded by thickly populated mansion. The white-parasoled scepter-holding serpent-ensign spear-wielding Pallava king comes to offer worship in the temple of Paramecchura Vinnagaram.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top