(1136)
பிறையுடை வாணுதல் பின்னை திறத்து முன்னொரு கால்செரு வில்லுருமின்,
மறையுடை மால்விடை யேழடர்த்தாற் கிடந் தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
கறையுடை வாள்மற மன்னர்க்கெடக் கடல் போல முழங்கும் குரல்கடுவாய்,
பறையுடைப் பல்லவர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணக ரமதுவே.
பதவுரை
|
முன்னே ஒருகால் |
– |
முன்னொருகால் |
|
பிறைவாள் உடை நுதல் பின்னைதிறத்து |
– |
சந்திர கலைபோன்று ஒளியையுடைத்தான நெற்றியையுடையளான நப்பின்னைக்காக |
|
உருமின் |
– |
இடிபோன்ற கரிஜனையையுடையவைகளாய் |
|
மறை உடை |
– |
எதிர்த்து வருகையை யுடையவைகளான |
|
மால் விடை ஏழ் |
– |
பெரிய ஏழு ரிஷபங்களை |
|
செருவில் |
– |
போர்க்களத்தில் |
|
அடர்த்தாற்கு |
– |
வலியடக்கின பெருமானுக்கு |
|
இடம் |
– |
இருப்பிடமாவது |
|
தடம் சூழ்ந்து அழகாய கச்சி |
||
|
கறை உடை வாள் |
– |
ரத்தக்கறை மாறாத வாளை யுடையவர்களும் |
|
மறம் |
– |
த்வேஷமுடையவர்களுமான |
|
மன்னர் |
– |
எதிரரசர்க்ள |
|
கெட |
– |
முடிந்துபோம்படியக |
|
கடல்போல் முழங்கும் குரல் |
– |
கடல்போலே கோஷம் செய்கிற குரலையுடைய |
|
கடுவாய்ப் பறை உடை |
– |
கடுவாய்ப்பறையை உடையவனான |
|
பல்லவர் கோன்–; |
||
|
பணிந்த–; |
||
|
பரமேச்சுர விண்ணகரம் அதுவே–. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- உருமு – ‘உரும்’ என்றாலும் ‘உருமு’ என்றாலும் இடிக்குப் பெயர்: இலக்கணையால் இடி போன்ற குரலைச் சொல்லுகின்றதிங்கெனக் கொள்க.
கடுவாய்ப்பறையுடை – பல்லவராஜனிடமிருந்த பறைக்கு—-‘கடுவாய்ப்பறை’ என்று பெயர்வழங்கி வந்ததாகச் சில செப்பேடுகளிற் காண்கிறது.
English Translation
For the sake of the moon-faced Nappinnai, the Lord fought seven strong bulls. He resides in beautiful Kanchi surrounded by water tanks. Our Pallava king has war-drums that roll like the roaring seas, dispatching enemy kings to the sharp edge of his mighty sword. He comes to offer worship in the temple of Paramecchura Vinnagaram.
