(1536)
மறையாரும் பெருவேள்விக் கொழும்புகைபோய் வளர்ந்து,எங்கும்
நிறையார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர்
பிறையாரும் சடையானும் பிரமனுமுன் தொழுதேத்த
இறையாகி நின்றான்றன் இணையடியே யடைநெஞ்சே.
பதவுரை
|
மறை ஆரும் |
– |
வேதங்களில் பிரதிபாதிக்கப்பட்ட |
|
பெரு வேள்வி |
– |
பெரிய யஜ்ஞங்களிலுண்டான |
|
கொழும்புகை |
– |
நல்ல புகையானது |
|
வளர்ந்து போய் |
– |
மேலே கிளம்பிப்போய் |
|
எங்கும் நிறை ஆர வான்மூடும் |
– |
எல்லாவிடங்களிலும் நிறைந்திருந்து ஆகாசத்தை மறைக்கப்பெற்ற |
|
நீள் செல்வத் திருநறையூர்-; |
||
|
பிறை ஆரும் சடையானும் |
– |
சந்திரகலையையுடைய சடை முடியை யுடையனான சிவனும் |
|
பிரமனும் |
– |
நான்முகனும் |
|
முன் |
– |
முன்னேநின்று |
|
தொழுது ஏத்த |
– |
வணங்கித்துதிக்கும்படி |
|
இறை ஆகி நின்றான் தன் |
– |
ஸ்வாமியாயெழுந்தருளியிருக்கும் பெருமானுடைய |
|
இணை அடியே நெஞ்சே அடை-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- யஜ்ஞயாகங்களை யநுஷ்டிக்கும் வைதிக ப்ராஹ்மணர்கள் வாழ்கிற விடம் திருநறையூர் என்பது முன்னடிகளின் கருத்து; “மல்லைச் செல்வ வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய்யழல் வான்புகை போய்த் திடவிசும்பிலமரர் நாட்டை மறைக்குந்தண் திருப்புலியூர்” (8-9-8) என்ற திருவாய்மொழியை அடியொற்றி யருளிச்செய்கிறபடி. ஹோமரக்நிகளிற் கிளர்ந்த தூமம் ஆகாசமெங்கும் பரவி மறைந்திருக்கப்பெற்ற. திருநறையூரில் பிரமன் சிவன் முதலான தெய்வங்கள் பணிந்து போற்ற ஸ்வாமியாக எழுந்தருளியிருக்கு மெம்பிரானுடைய இணையடியே அடை நெஞ்சே!
English Translation
O Heart! The smoke from the fire altar of the Vedic seers climbs up and fills the sky with wealth-laden clouds in Tirunaraiyur. The Lord stands above all, worshipped by Siva and Brahma, Attain his feet.
