(1537)
திண்கனக மதிள்புடைசூழ் திருநறையூர் நின்றானை
வண்களக நிலவெறிக்கும் வயல்மங்கை நகராளன்
பண்களகம் பயின்றசீர்ப் பாடலிவை பத்தும்வல்லார்
விண்களகத் திமையவராய் வீற்றிருந்து வாழ்வாரே.
பதவுரை
|
திண் களகம் மதிள் புடைசூழ் |
– |
திடமாய் (சுண்ணாம்புச்) சாந்து இடப்பெற்றதான திருமதிளாலே நாற்புறமும் சூழப்பட்ட |
|
திருநறையூர் |
– |
திருநறையூரில் |
|
நின்றானை |
– |
எழுந்தருளியிருக்குமெம்பெருமான் விஷயமாக |
|
வண் களகம் |
– |
அழகிய அன்னப்பறவைகள் |
|
நிலவு எறிக்கும் |
– |
நிலாப்போல் விளங்கப்பெற்ற |
|
வயல் |
– |
கழனிகளையுடைத்தான |
|
மங்கை நகராளன் |
– |
திருமங்கை நாட்டுக்குத் தலைவரான ஆழ்வார் |
|
பண்கள் அகம் பயின்ற |
– |
பண்களுக்குள்ளே ஸாரமான பண்ணிலே அருளிச்செய்த |
|
சீர் |
– |
சீர்மை பொருந்திய |
|
பாடல் இவை பத்தும் |
– |
இப்பாசுரங்கள் பத்தையும் |
|
வல்லார் |
– |
ஓதவல்லவர்கள் |
|
விண்கள் அகத்து |
– |
மேலுலகங்களுள் முக்கியமான பரமபதத்தில் |
|
இமையவர்ஆய் |
– |
நித்யஸூரிகளோடு ஒரு கோஷ்டியாய் |
|
வீற்றிருந்து |
– |
பெருமைபெறவிருந்து |
|
வாழ்வார் |
– |
வாழப்பெறுவர். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பாட்டில் அடிதோறும் களகமென்னுஞ்சொல் திரிபாக அமைக்கப்பட்டுள்ளது.
திண்களகமதிள் = இங்குக் களகமாவது சுண்ணாம்புச்சாந்து; ஞானசம்பந்தர் பாடிய தேவாரம் முதல் திருமுறை, சீர்காழிப்பதிகத்தில் – “களகப்புரிசை கவினார்சாருங் கலக்காழி” என்றிவிடத்து இப்பொருளில் பிரயோகங்காண்க.
வண்களக நிலவெறிக்கும் = இங்குக் களகமாவது ஹம்ஸபக்ஷி; ‘கலஹம்ஸ என்னும் வடசொல்லின் மரூஉ; “வயன் களகத் தேரேறி வேதாவும் வேண்டுவழிச் செல்ல” (பழம் பாட்டு) என்றவிடத்து இப்பொருளிற் பிரயோகங்காண்க. இதற்கு வேறுவகையாகவும் உரைக்கலாம்; – களகம் – நெற்கதிர்; கம் – நீரை, களம் – இடமாகக்கொண்டது; (மருத நிலம்.) அதன் முதன்மைப் பயிர் நெல் ஆகையால், களகம் – நெற்பயிர் என்னும் பொருள் பெறலாம். இப்பொருளும் வியாக்கியானத்திற் கொள்ளப்பட்டதே. என்ற வடசொல் திரிபு என்னலாம்.
ஈற்றடியில், ‘விண்கள் அகத்து’ எனப் பிரித்துரைப்பதல்லாமல், ‘வண்களகத்து’ என்று கொண்டு முரைக்கலாம் : களம் + அத்து, களகத்து; (நன்னூல் – உருபுபுணரியல், 13) சபையின் கண் என்றபடி. ‘களம்’ என்ற சொல் சபையெனப் பொருள்படுதலை, “உளரெனினனு மல்லாரோடடொப்பர் களனஞ்சிக். கற்றசெலச்சொல்லாதார்” (730) என்ற குறட்பிரயோகத்தாலு முணர்க.
இத்திருமொழி கற்பர்கள் பரமபதத்திலே போய் நித்யஸூரிகளோடே ஒரு கோவையாய் எம்பெருமானை நித்யாநுபவம் பண்ணப்பெறுவர்கள் என்றாராயிற்று.
English Translation
The king of Mangai city surrounded by lakes with swan pairs offers this garland of pure Tamil Pann-based songs at the feet of the Lord who stands amid spotless fall mansions in Tirunaraiyur. Those who master it will attain high heaven and live with celestials forever.
