(1525)

(1525)

மண்ணின்மீ பாரங் கெடுப்பான் மறமன்னர்

பண்ணின்மேல் வந்த படையெல்லாம் பாரதத்து

விண்ணின்மீ தேற விசயன்தே ரூர்ந்தானை

நண்ணிநான் நாடி நறையூரில் கண்டேனே.

 

பதவுரை

மண்ணின் மீ பாரம்

பூமியின் மீது உண்டான சுமைகளை

கெடுப்பான்

தொலைப்பதற்காகவும்

மறம் மன்னர்

மாற்றரசர்களது

பண்ணின் மேல் வந்த படை எல்லாம்

ஒழுங்காக எதிர்த்து வந்த எல்லாச் சேனைகளும்

விண்ணின் மீது ஏற ஸ்ரீ

வீரஸ்வர்க்கம் போய்ச் சேரும்படியாகவும்

பாரத்ந்து

பாரதப்போரில்

விசயன் தேர் ஊர்ந்தானை

அர்ஜுனனுடைய தேரை நடத்தினவனை

நான் நண்ணிநாடி

நான் ஆசைப்பட்டுத்தேடி

நறையூரில், கண்டேன்-.

 

English Translation

The Lord who drove the chariot for Vijayan and despatched the tyrant kings to heaven, and thus relieved the Earth of its burden, resides in Naraiyur, I have seen him today.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top