(1526)

(1526)

பொங்கேறு நீள்சோதிப் பொன்னாழி தன்னோடும்

சங்கேறு கோலத் தடக்கைப் பெருமானை

கொங்கேறு சோலைக் குடந்தைக் கிடந்தானை

நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே.

 

பதவுரை

பொங்கு ஏறு

மேன்மேலும் அதிசயித்து வருகிற

நீள் சோதி

அளவற்ற தேஜஸ்ஸையுடைய

பொன் ஆழி தன்னோடும்

அழகிய திருவாழி யாழ்வானும்

சங்கு ஏறு கோலம் தட

ஸ்ரீ பாஞ்சஜந்யாழ்வானும் குடிகொண்டிருக்கப்பெற்ற அழகிய

கை

திருக்கைகளையுடைய

பெருமானை

பெருமை பொருந்தியவனும்

கொங்குஏறு சோலை

தேன் மிகுந்திருக்கிற பொழில்களையுடைய

குடந்தை

திருக்குடந்தையில்

கிடந்தானை

பள்ளிகொண்டிருப்பவனுமான

நம் கோனை

நம்பெருமானை

நாடி, நறையூரில் கண்டேன்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆற்றுப் பெருக்குப்போலே மேன்மேலும் மிக்கு வளராநின்ற எல்லையில்லாத தேஜஸ்ஸையுடைய திருவாழியாழ்வானோடுகூட ஸ்ரீபாஞ்சஜந்யாழ்வானுக்கும் குடியிருப்பான அழகிய திருக்கைகளை யுடையனாய்த் திருக்குடந்தையிற் கண்வளர்ந்தருள்பவனான எம்பெருமானைத் திருநறையூரிலே காணப்பெற்றேன்.

 

English Translation

The Lord who reclines in fragrant kudanadai wields a beautiful white conch and a radiant discus.  He is our king.  I have seen him in Naraiyur.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top