(1527)
மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை
நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்தார்
கன்னவிலும் தோளான் கலிய னொலிவல்லார்
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே.
பதவுரை
|
மன்னு |
– |
(பகவத்ஸம்பந்தம் ஒரு நாளும் மாறாமல்) நித்யமாயிருக்கிற |
|
மதுரை |
– |
வடமதுரையில் |
|
வசுதேவர் வாழ் முதலை |
– |
வசுதேவருடைய வாழ்வுக்கு மூலகந்தமாக வந்து பிறந்தவனான |
|
நல் நறையூர் நின்ற நம்பியை-; |
||
|
வம்பு அவிழ் தார் |
– |
பரிமளம் விளங்குகின்ற மாலையையுடையராய் |
|
கல் நவிலும் தோளான் |
– |
மலையென்று சொல்லத் தகுந்த புஜங்களை யுடையரான |
|
கலியன் |
– |
திருமங்கையாழ்வார் |
|
ஒலி |
– |
அருளிச்செய்த இத்திரு மொழியை |
|
வல்லார் |
– |
ஓதவல்லவர்கள் |
|
பொன் உலகில் |
– |
பரமபதத்திற்சென்று |
|
வானவர்க்கு |
– |
அங்குள்ள நித்யஸூரிகளுக்கு |
|
புத்தேளிர் ஆகுவர் |
– |
பூஜ்யராகப் பெறுவர். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மன்னு மதுரை – பகவத் ஸம்பந்தம் ஒருநாளும் மாறாமல் நித்யமாயிருக்கப்பெற்ற மதுரை என்றபடி; முதலில் ஸ்ரீவாமநமூர்த்தி நெடுநாளளவும் தவம்புரிந்த ஸித்தாச்ரமமாயிருந்தும், பிறகு ஸ்ரீசத்ருக்நாழ்வான் பிரதிபக்ஷ நிரஸநம் பண்ணி அரசாட்சிபுரிந்த இடமாயிருந்தும், பின்பு ஸ்ரீக்ருஷணபகவான் திருவவதரித்த விடமாயும் ஆக விப்படி பகவத்ஸம்பந்தம் இடையறாது அநுவர்த்திக்கப்பெற்ற ஊர்.
புத்தேளிர் – தேவதைகள் என்றபடி. திருவாசசிரியத்தில் “நான் முகம் புத்தேள்” என்ற நம்மாழ்வார்பிரயோகமுங்காண்க. நித்யஸூரிகளால் கொண்டாடப்படுவர்களென்றபடி.
English Translation
This garland of Tamil songs by bee-humming garland-wearing strong-armed kaliyan extols the Lord of Mathura, Vasudev’s bright child, who resides in Naraiyur. Those who master it will become Gurus to the gods.
