(3880)
மாலைநண்ணித் தொழுதெழுமினோவினைகெட
காலைமலை கமலமலரிட்டுநீர்
வேலைமோதும்மதிள்சூழ் திருக்கண்ணபுரத்து
ஆலின்மேலாலமர்ந்தான் அடியிணைகளே.
(3881)
கள்ளவிழும்மலரிட்டு நீரிறைஞ்சுமின்
நள்ளிசேரும்வயலசூழ் கிடங்கின்புடை
வெள்ளியேய்ந்தமதிள்சூழ் திருக்கண்ணபுர
முள்ளி நாளுந்தொழுதேழுமினோதொண்டரே.
(3882)
தொண்டர்நுந்தம் துயர்போகநீரேகமாய்
விண்டுவாடாமலரிட்டு நீரிறைஞ்சுமின்
வண்டுபாடும்பொழில் சூழ் திருக்கண்ணபுரத்
தண்டவாணன் அமரர்பெருமானையே.
(3883)
மானை நோக்கி மடப்பின்னைதன்கேள்வனை
தேனைவாடாமலரிட்டு நீரிறைஞ்சுமின்
வானையுந்துமதிள்சூழ் திருக்கண்ணபுரம்
தானயந்தபெருமான் சரணாகுமே.
(3884)
சாணாமாகும் தனதாளா டைந்தார்க் கெல்லாம்
மரணமானால் வைகுந்தம்கொடுக்கும்பிரான்
அரணமைந்த மதிள்சூழ் திருக்கண்ணபுரத்
தரணியாளன் தனதண்டர்க்சன்பாகுமே.
(3885)
அன்பனாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம்
செம்போனாகத்து அவணனுடல்கீண்டவன்
நன்போனேய்ந்தமதிள்சூழ் திருக்கண்ணபுரத்
தன்பன் நாளும் தனமெய்யர்க்கு மெய்யனே.
(3886)
மெய்யனாகும் விரும்பித்தொழுவார்க்கெல்லாம்
பொய்யனாகும் புறமேதொழுவார்க்கெல்லாம்
செய்யில்வாளையுகளும் திருக்கண்ணபுரத்
தையன் ஆகத்தணைப்பார்கட்கணியனே.
(3887)
அணியனாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம்
பிணியும் சாரா பிறவிகெடுந்தாளும்
மணிபொனேய்ந்தமதிள்சூழ் திருக்கண்ணபுரம்
பணிமின் நாளும்பரமேட்டிதன்பாதமே.
(3888)
பாதநாளும்பணியத் தணியும்பிணி
ஏதாம் எனக்கேலினியென்குறை
வேதநாவர்விரும்பம் திருக்கண்ணபுரத்
தாதியானை அடைந்தார்க் கல்லலில்லையே.
(3889)
இல்லையல்லல் எனக்கேலினியென்குறை
அல்லிமாதரமரும் திருமார்பினன்
கல்லிலேய்ந்த மதிள்சூழ் திருக்கண்ணபுரம்
சொல்ல நாளும்துயர் பாடுசாராவே.
(3890)
பாடுசாராவினை பற்றறவேண்டுவீர்
மாடநீடு குருகூர்ச்சடகோபன் சொல்
பாடலானதமிழ் ஆயிரத்துளிப்பத்தும்
பாடியாடி பணிமினவன் தாள்களே.
