(3885)
அன்பனாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம்
செம்போனாகத்து அவணனுடல்கீண்டவன்
நன்போனேய்ந்தமதிள்சூழ் திருக்கண்ணபுரத்
தன்பன் நாளும் தனமெய்யர்க்கு மெய்யனே.
பதவுரை
|
தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் |
– |
தனது திருவடிகளைப்பற்றினாரெல்லார்க்கும் |
|
அன்பன் ஆகும் |
– |
அன்பு செய்பவனாய் |
|
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கிண்டவன் |
– |
சிவந்த பொன்போன்ற அடம்பையுடைய இரணியாசுரனது உடைலைக் கீண்டவனாய் |
|
நான் பொன் எய்ந்த மதிள் சூழ் |
– |
நல்ல பொன்னாலே யமைத்த மதிளாலே சூழப்பட்ட |
|
திரு கண்ணபுரத்து அன்பன் |
– |
திருக்கண்ணபுரத்திலே விருப்பமுடையவனான எம்பெருமான் |
|
தன மெய்யர்க்கு |
– |
தன் திறத்திலே உண்மையாக ஸ்நேஹிக்குமவர்களுக்கு |
|
நாளும் மெய்யன் |
– |
எப்போதும் உண்மையான ஸ்நேஹமுடையவன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***– தன தாளடைந்தார்க்கெல்லாம் அன்பனாகும்= “அநாலோசித விசேஷாசேஷ லோகசரண்ய!” என்று எம்பெருமானாரருளிச் செய்வதை இங்கு அநுஸந்திப்பது. தனது திருவடிகளையுடைந்தாரில் இன்னாரினையாசென்று வாசி பாராதே வஸிஷ்ட சண்டாள விபாகமற எல்லார்க்குமொக்க ஸ்நேஹிக்குமவன் எம்பெருமான். ஸ்ரீவைகுண்ட ஸ்தலத்தில் *ய: சக்கி தேவ யதி சிஞ்சந ஹந்த ஜந்து பவ்யோ பஜேத பகவந்த மநந்யசேதா, தம் ஸோயமீத்ருச இயாநிதி வாப்யஜாநந் ஹை வைநதேயஸமமபி உரரீகரோஷி* என்று ஆழ்வானருளிச் செய்தது இங்கே அநுஸந்தேயம்.
செம்பொனாகத்தவுணனுடல் கீணடவன்=ப்ரஹலாதாழ்வான் அஸுரயோனியிலே பிறந்திருக்கச் செய்தேயும் அவனது அன்பையே கணிசித்து அவனை விரோதி நிரஸக புர்வகமாக அநுக்ரஹித்தவன்; அவ்வண்ணமாக எல்லோரையும் அநுக்ரஹிக்க வல்லவன் என்று காட்டினபடி. அப்படிப்பட்ட மஹாகுணம் விளங்கத் திருக்கண்ண புரத்திலே வர்த்திக்கின்ற பெருமான், தன மெய்யர்க்கு நாளும் மெய்யன்=தன் பக்கவில் பாரமார்த்திக ப்ரயோஜந புத்தியுடையார்க்குத் தானும் அவர்கள் பக்கலிலே பாரமார்த்திக ப்ரயோஜந புத்தியையுடையனாயிருப்பன். ஆகவே அப்பெருமான் பக்கலில் பாரமார்த்திக ப்ரயோஜந புத்தியைப் பண்ணி ஆச்ரயிங்கோ ளென்றாராயிற்று.
English Translation
He is a friend to all who seek his feet. He resides in the gold walled city of Tirukkannapuram. He tore the radiant chest of Hiranya. He is the abiding friend of seekers
