(3888)

(3888)

பாதநாளும்பணியத் தணியும்பிணி

ஏதாம் எனக்கேலினியென்குறை

வேதநாவர்விரும்பம் திருக்கண்ணபுரத் தாதியானை

அடைந்தார்க் கல்லலில்லையே.

 

பதவுரை

வேதம் நாவர் விரும்பும்

வைதிகர்கள் விரும்பி வர்த்திக்குமிடமான

திருக்கண்ணபுரத்து

திருக்கண்ணபுரத்தி லெழுந்ததருளியிருக்கிற

ஆதியானை

முழுமுதற்கடவுளான எம்பெருமானை

அடைந்தார்க்கு

ஆச்ரயித்தவர்களுக்கு

அல்லல் இல்லை

துக்கமொன்று மில்லையாகும்

நாளும் பாதம் பணிய

(அப்பெருமானுடைய) திருவடிகளை எப்போதும் ஸேவிக்கு மளவில்

பிணி தணியும்

நோய்கள் அறும்

ஏகம்சாரா

பாவங்கள் சேரமாட்டா

இனி

இப்படியான பின்பு

என் குறை

என்ன குறையுண்டு?

(ஒரு குறையுமில்லை)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– பிறர்க்கு உபதேசஞ்செய்வது கிடக்க, தாம் முன்னம் அவனையாச்ரயித்துக் குறை தீர்ந்தபடியைப் பேசிக்களிக்கிறார்.  அவனது திருவடிகளை யாச்ரயிக்கவே அநாதி காலமாகத் திரட்டின பாவங்களெல்லாம் தொலையும் ; இனிமேல் பாவம் வந்து புகாது.  இது என்னுடைய அநுபவத்தாலே;  நான் குறை தீர்ந்தேனாகையாலே நீங்களும் குறை தீரப்பெ வேணுமென்று சொல்லுகிறேன்.  வேதமறிந்த வைதிகர்கள் திரும்பி வர்த்திக்கிற திருக்கண்ணபுரத்திலே, ஸந்நிதி பண்ணியிருக்கிற ஜகத்காரண பூதனையடைந்தார்க்கு அல்லல் இருக்குமோ? தாய்மடியிலே சாய்ந்தார்க்கு கிலேசமில்லை யென்னுமிடம் சொல்லவேணமோ?

 

English Translation

Worship him and be rid of diseases. Our karmas will not bind us, so what do we lose?  Vedic seers prefer the Lord in Tirukkannapuram. Those who attain him have no despair

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top