(2731)
அன்ன அறத்தின் பயனாவது?, ஒண்பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால், – காமத்தின் மன்னும் வழிமுறையே நிற்றும்நாம் மானோக்கின்
அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்,
(2732)
மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும்,
தென்னுறையில் கேட்டறிவதுண்டு-அதனை யாம்தெளியோம்
(2733)
மன்னும் வடநெறியே வேண்டினோம்வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ்சந் தனக்குழம்பின், அன்னதோர் தன்மை அறியாதார், – ஆயன்வேய்
(2734)
இன்னிசை ஓசைக் கிரங்காதார், மால்விடையின் மன்னும் மணிபுலம்ப வாடாதார், – பெண்ணைமேல்
(2735)
பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலுக்கு, உன்னி யுடலுருகி நையாதார், – உம்பவர்வாய்த்
(2736)
துன்னும் மதியுகுத்த தூநிலா நீணெருப்பில், தம்முடலம் வேவத் தளராதார், – காமவேள்
(2737)
மன்னும் சிலைவாய் மலர்வாளி கோத்தெய்ய, பொன்னொடு வீதி புகாதார் தம் பூவணைமேல்
(2738)
சின்ன மலர்க்குழலும் அல்குலும் மென்முலையும், இன்னிள வாடை தடவத்தாம் கண்டுயிலும்,
பொன்னனையார் பின்னும் திருவுறுக போர்வேந்தன்
(2739)
தன்னுடைய தாதை பணியால் அரசொழிந்து ,
பொன்னகரம் பின்னே புலம்ப வலங்கொண்டு, மன்னும் வளநாடு கைவிட்டு , – மாதிரங்கள்
(2740)
மின்னுருவில் விண்டோர் திரிந்து வெளிப்பட்டு கன்நிறைந்து தீய்ந்து கழையுடைத்து கால்சுழன்று,
பின்னும் திரைவயிற்றுப் பேயே திரிந்துலவா, கொன்னவிலும் வெங்கானத் தூடு,-கொடுங்கதிரோன்