5 – 3 துக்கச்சுழல்

(453)

துக்கச் சுழலையைச் சூழ்ந்துகிடந்த வலையை அறப்பறித்து

புக்கினில் புக்குன்னைக் கண்டுகொண் டேன்இனிப் போகவிடுவதுண்டே

மக்க ளறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன்வயிற்றில்

சிக்கென வந்து பிறந்துநின் றாய்திரு மாலிருஞ்சோலை யெந்தாய்.

விளக்க உரை

(454)

வளைத்துவைத் தேன்இனிப் போகலொட்டேன் உந்த னிந்திர ஞாலங்களால்

ஒளித்திடில் நின்திரு வாணைகண் டாய்நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை

அளித்தெங்கும் நாடும் நகரமும் தம்முடைத் தீவினை தீர்க்கலுற்று

தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தமுடைத் திரு மாலிருஞ் சோலையெந்தாய்.

விளக்க உரை

(455)

உனக்குப் பணிசெய் திருக்கும் தவமுடை யேன்இனிப் போய்ஒருவன்

தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கைநின் சாயை யழிவு கண்டாய்

புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டிஉன் பொன்னடி வாழ்கவென்று

இனக்குற வர்புதிய துண்ணும் எழில்திரு மாலிருஞ் சோலையெந்தாய்.

விளக்க உரை

(456)

காதம் பலவும் திரிந்துழன் றேற்குஅங்கோர் நிழலில்லை நீருமில்லைஉன்

பாத நிழலல்லால் மற்றோ ருயிர்ப்பிடம் நான்எங்கும் காண்கின்றிலேன்

தூதுசென் றாய்குரு பாண்டவர்க் காய்அங்கோர் பொய்சுற்றம் பேசிச்சென்று

பேதஞ்செய்து எங்கும் பிணம்படுத்தாய் திருமாலிருஞ் சோலையெந்தாய்.

விளக்க உரை

(457)

காலுமெழா கண்ணநீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிகுரல்

மேலு மெழாமயிர்க் கூச்சுமறாஎன தோள்களும் வீழ்வொழியா

மாலுக ளாநிற்கும் என்மன னேஉன்னை வாழத் தலைப்பெய்திட்டேன்

சேலுக ளாநிற்கும் நீள்சுனை சூழ்திரு மாலிருஞ் சோலையெந்தாய்.

விளக்க உரை

(458)

எருத்துக் கொடியுடை யானும் பிரமனும் இந்திர னும்மற்றும்

ஒருத்தரும் இப்பிற வியென்னும் நோய்க்கு மருந்தறி வாருமில்லை

மருத்துவ னாய்நின்ற மாமணி வண்ணா மறுபிற விதவிரத்

திருத்திஉங் கோயிற் கடைப்புகப் பெய்திரு மாலிருஞ் சோலையெந்தாய்.

விளக்க உரை

(459)

அக்கரை யென்னு மனத்தக் கடலு ளழுந்திஉன் பேரருளால்

இக்கரை யேறி யிளைத்திருந் தேனைஅஞ் சேலென்று கைகவியாய்

சக்கர மும்தடக் கைகளும் கண்களும் பீதக வாடையொடும்

செக்கர் நிறத்துச் சிவப்புடை யாய்திரு மாலிருஞ் சோலையெந்தாய்

விளக்க உரை

(460)

எத்தனை காலமும் எத்தனை யூழியும் இன்றொடு நாளையென்றே

இத்தனை காலமும் போய்க்கிறிப் பட்டேன் இனிஉன்னைப் போகலொட்டேன்

மைத்துனன் மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவ ரைக்கெடுத்தாய்

சித்தம்நின் பால தறிதியன் றேதிரு மாலிருஞ் சோலையெந்தாய்.

விளக்க உரை

(461)

அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமை செய்ய லுற்றிருப்பன்

இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போகவிடுவதுண்டே

சென்றங்கு வாணனை ஆயிரந் தோளும் திருச்சக் கரமதனால்

தென்றித் திசைதிசை வீழச்செற்றாய் திருமாலிருஞ் சோலையெந்தாய்.

விளக்க உரை

(462)

சென்றுல கம்குடைந் தாடும் சுனைத்திரு மாலிருஞ் சோலைதன்னுள்

நின்ற பிரான்அடி மேல்அடி மைத்திறம் நேர்பட விண்ணப்பஞ்செய்

பொன்திகழ் மாடம் பொலிந்துதோன்றும் புதுவைக்கோன் விட்டுசித்தன்

ஒன்றினோ டொன்பதும் பாடவல்லார் உல கமளந் தான்தமரே.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top