(462)

(462)

சென்றுல கம்குடைந் தாடும் சுனைத்திரு மாலிருஞ் சோலைதன்னுள்

நின்ற பிரான்அடி மேல்அடி மைத்திறம் நேர்பட விண்ணப்பஞ்செய்

பொன்திகழ் மாடம் பொலிந்துதோன்றும் புதுவைக்கோன் விட்டுசித்தன்

ஒன்றினோ டொன்பதும் பாடவல்லார் உல கமளந் தான்தமரே.

பதவுரை

உலகம்

–

உலகத்தாரெல்லாரும்
சென்று

–

(தங்கள் தங்களிருப்பிடித்தில் நின்றும்) போய்
குடைந்து

–

அவகரஹித்து
ஆடும்

–

நீராடா நிற்கப்பெற்ற
சுனை

–

தீர்த்தங்களையுடைய
திருமாலிருஞ்சோலை தன்னுள்

–

திருமாலிருஞ்சோலை மலையில்
நின்ற பிரான்

–

எழுந்தருளியிருக்கிற எம்பெருமானடைய
அடி மேல்

–

திருவடிகள்
அடிமைத்திறம்

–

கைங்கரிய விஷயமாக
பொன் திகழ்

–

ஸ்வர்ணமயமாய் விளங்கா நின்ற
மாடம்

–

மாடங்களினால்
பொலிந்து தோன்றும்

–

நிறைந்து விளங்கா நின்ற
புதுவை

–

ஸ்ரீ வில்லிபுத்தூர்க்கு
கோன்

–

தலைவரான
விட்டு சித்தன்

–

பெரியாழ்வார்
நேர்பட

–

பொருந்தும்படி
விண்ணப்பம் செய்

–

அருளிச்செய்த
ஒன்றினோடு ஒன்பதும்

–

இப் பத்துப் பாசுரங்களையும்
பாட வல்லார்

–

பாடவல்லவர்கள்
உலகம் அளந்தான் தமர்

–

திரிவிக்கிரமாவதாரம் செய்தருளின எம்பெருமானுக்குச் சேஷ பூதர்களாகப் பெறுவர்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகிறார் இப்பாட்டால். இத்திருமொழியில், “இனிப்போக விடுவதுண்டே” “இனிப்போகலொட்டேன். “ஒளித்திடில் நின்திருவாணைக்கண்டாய்” என்றிப்புடைகளிலே பல சொல்லித்தடுப்பது வளைப்பதாயிருந்தது – ‘நமது கைங்கரியங்களை எம்பெருமான் உடனிருந்து கொள்ளவேணும்’ என்ற விருப்பத்தினாலாதலால், “அடிமைத்திறம் …. விண்ணப்பஞ்செய்” எனப்பட்டது. தன்னடையே வருகைக்கும் நேர்பாடு என்று பெயராதலால், நேர்பட என்பதற்கு, தன்னடையே என்றும் பொருள் கொள்ளலாமென்பர்; ஆயாஸமில்லாம லென்றபடி. ***-***-***-***- என்றார்போல் …     (க)

English Translation

The whole world goes to Tirumalirumsolai on pilgrimagem to take a holy dip in its waters. At the feet of the Lord who stands there, this decad of songs is dedicated as a sincere prayer by Vishnuchitta, king of Puduvai town of mansions gleaming with gold. Those who master it will become agents of the Lord who measured the Earth.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top