திருக்குறுந்தாண்டகம் திருமொழி – 2

இரண்டாந் திருமொழி

(2042)

தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுதடி பணியு மாறு

கண்டு, தான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியா யெந்தாய்,

அண்டமா யெண்டி சைக்கும் ஆதியாய் நீதி யான,

பண்டமாம் பரம சோதி நின்னையே பரவு வேனே.

விளக்க உரை

(2043)

ஆவியயை யரங்க மாலை அழுக்குரம் பெச்சில் வாயால்,

தூய்மையில் தொண்ட னேன்நான் சொல்லினேன் தொல்லை நாமம்,

பாவியேன் பிழத்த வாறென் றஞ்சினேற் கஞ்ச லென்று

காவிபோல் வண்ணர் வந்தென் கண்ணுளே தோன்றினாரே.

விளக்க உரை

(2044)

இரும்பனன் றுண்ட நீரும் போதரும் கொள்க, என்றன்

அரும்பி ணி பாவ மெல்லாம் அகன்றன என்னை விட்டு,

சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட,

கரும்பினைக் கண்டு கொண்டென் கண்ணிணை களிக்கு மாறே.

விளக்க உரை

(2045)

காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி, நாளும்

பாவியே னாக வெண்ணி அதனுள்ளே பழுத்தொ ழிந்தேன்,

தூவிசேர் அன்னம் மன்னும் சூழ்புனல் குடந்தை யானை,

பாவியென் பாவி யாது பாவியே னாயி னேனே.

விளக்க உரை

(2046)

முன்பொலா இராவ ணன்றன் முதுமதி ளிலங்கை வேவித்து,

அன்பினா லனுமன் வந்தாங் கடியிணை பணிய நின்றார்க்கு,

என்பெலா முருகி யுக்கிட் டென்னுடை நெஞ்ச மென்னும்,

அன்பினால் ஞான நீர்கொண் டாட்டுவ னடிய னேனே.

விளக்க உரை

(2047)

மாயமான் மாயச் செற்று மருதிற நடந்து, வையம்

தாயமா பரவை பொங்கத் தடவரை திரித்து, வானோர்க்

கீயுமால் எம்பி ரானார்க் கென்னுடைச் சொற்க ளென்னும்,

தூயமா மாலை கொண்டு சூட்டுவன் தொண்ட னேனே!

விளக்க உரை

(2048)

பேசினார் பிறவி நீத்தார் பேருளான் பெருமை பேசி,

ஏசினார் உய்ந்து போனார் என்பதிவ் வுலகின் வண்ணம்,

பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தற்கு,

ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே.

விளக்க உரை

(2049)

இளைப்பினை யியக்கம் நீக்கி யிருந்துமுன் னிமையைக் கூட்டி,

அளப்பிலைம் புலன டக்கி அன்பவர் கண்ணே வைத்து,

துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர்விட்டு, ஆங்கே

விளக்கினை விதியில் காண்பார் மெய்ம்மையே காண்கிற் பாரே!

விளக்க உரை

(2050)

பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிதந் துண்ணும்,

உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர், உலக மேத்தும்

கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று

மண்டினார், உய்யல் அல்லால் மற்றையார்க் குய்ய லாமே?

விளக்க உரை

(2051)

வானவர் தங்கள் கோனும் மலர்மிசை அயனும், நாளும்

தேமலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை,

மானவேல் கலியன் சொன்ன வண்டமிழ் மாலை நாலைந்தும்,

ஊனம தின்றி வல்லார் ஒளிவிசும் பாள்வ ர் தாமே.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top