(2050)

(2050)

பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிதந் துண்ணும்,

உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர், உலக மேத்தும்

கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று

மண்டினார், உய்யல் அல்லால் மற்றையார்க் குய்ய லாமே?

பதவுரை

பிண்டி ஆர் மண்டை ஏந்தி

உளுத்தபொடிகள் உதிருகிற தலையோட்டைக் கையிலேந்திக்கொண்டு
பிறர்மனை

அயலாருடைய வீடுகளிலே
திரிதந்து

திரிந்து (பிச்சையெடுத்து)
உண்ணும்

ஜீவித்த
முண்டியான்

மொட்டையாண்டியான ருத்ரனுடைய
சாபம்

ப்ரஹ்மத்திசாபத்தை
தீர்த்த

போக்கின
ஒருவன்

அத்விதீயனான் எம்பெருமானுடைய
ஊர்

திருப்பதிகளாய்
உலகம் ஏந்தும்

உலகத்தவர்களால் கொண்டாடப்பட்டன வாயு முள்ள
கண்டியூர்

திருக்கண்டியூரென்ன
அரங்கம்

திருவரங்கமென்ன
மெய்யம்

திருமெய்யமென்ன
கச்சி

திருக்கச்சியென்ன
பேர்

திருப்பேர்நகரென்ன
மல்லை

திருக்கடன்மல்லையென்ன
என்று

ஆகிய இத்திருப்பதிகளைப் பேசிக்கொண்டு
மண்டினார்

அவகாஹிக்குமவர்கள்
உய்யல் அல்லால்

உஜ்ஜீவிக்கலாமத்தனை யொழிய
மற்றையார்க்கு

அல்லாதவர்களுக்கு
உய்யல் ஆமே

உஜ்ஜீவிக்க வழியுண்டோ? (இல்லை)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுகந்தருளின திவ்ய தேசங்களிலெங்கும் “பதியே பரவித் தொழுந்தொண்டர்“ என்னும்படியாக அவகாஹித்திருக்கும் அவர்கள் உஜ்ஜீவிக்க வழியுண்டே யல்லது அல்லாதவர்களுக்கு ஒருநாளும் உஜ்ஜீவிக்க வழியில்லை யென்கிறார். என்று வேதமானது எம்பெருமானை உள்ளபடி யறிந்தார்க்கல்லது உய்ய விரகில்லை யென்றது. அதனை மறுத்து, திவ்ய தேசங்களிலீடுபடுவார்க்கன்றி மற்றையோர்க்கு உய்யவழியில்லை யென்கிறாரிவ்வாழ்வார்.

“உண்ணும் முண்டியான்“ ‘உண்ணும் உண்டியான்“ என்பன பாடபேதங்கள் உண்டி-உணவு; பிச்சையெடுத்து உண்ணப்பட்ட உணவையுடையவன் என்றபடி.

“இளைப்பினையியக்கம் நீக்கி“ என்ற கீழ்ப்பாட்டிற்படியே வீணாக க்லேசப்படாதே “காம்பறத் தலைசிரைத்து உன் கடைத்தலையிலிருந்து வாழுஞ் சோம்பரையுகத்திபோலுஞ் சூழ்புனலரங்கத்தானே!“ என்கிறபடியே திவ்ய தேசாநுபவமே போதுபோக்காக இருப்பவர்கட்கே எம்பெருமானுடைய அநுக்ரஹம் அளவற்றிருக்குமென்றதாயிற்று.

English Translation

This fragrant garland of Tamil songs by spear-wielding Kalian extols the adorable. Lord with lotus eyes and lotus feet whom Brahma and indri worship with nectared flowers.  Those who master it perfectly will rule over the radiant sky-worlds.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top