(3938)

(3938)

ஆள்வான் ஆழிநீர் கோள்வாய அரவணையான்

தாள்வாய் மலரிட்டு நாள்வய் நாடீரே.

 

பதவுரை

ஆழிநீர்

காரணபூதமான ஏகாரிண வத்தலே

ஆள்வான்

ஆளுமவனான அப்பெருமானுடைய

கோள் வாய் அரவு அணையான

மிடுக்குப் பொருந்திய வாயை யுடையவனான ஆதிசேஷனைப் படுக்கை யாகவுடையனாய்க் கொண்டு     தாள்வாய்

மலர்  இட்டு

புஷ்பங்களை ஸமரிப்பித்து நாள் வாய்

நாடீர்

ஆசரயியுங்கோள்

திருவடிகளிலே நாடாறும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

****- நாராயண மந்த்ரத்தில் சதுர்த்தியின் அர்த்தத்தை யநுஸந்திக்கு மாசாரியர்கள் “அஸ்மை காலம் ஸகலமபி ஸர்வத்ர ஸகலாஸு அவஸ்தாஸு ஆவிஸ்ஸ்யர் மம ஸஹஜகைங்கரிய விதய” (அஷ்டச்லோக-3.) என்று கைங்கரிய ப்ரார்த்தனையைப் பொருளாகக்காட்டுகையாலே, இங்கு ஸம்ஸாரிகளை நோக்கிக் கைங்காரியத்தை வித்தருளுகிறார்.  ஆள்வான் என்று, கீழே சொன்ன ரஷகத்வத்தை அநுபாஷித்தபடி.  ஆழி நீர்ல் கோள்வாயரவணையானாய்க் கொண்டு ஆள்வான் – *ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற்கடல் யோக நித்திரை சிந்தை செய்யுமவனாகையாலே ஆர்த்தர்களின் கூப்பிடு கேட்கைக்காகவே சயனித்திருந்து ஆர்த்தத்வநி செவிப்பட்டவாறே  *நாகபரியங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரிம்* என்கிறபடியே ஓடிவந்து ரஷித்தருளுமவன்.  அன்னவனுடைய, தாள்வாய் மலரிட்டு – திருவடிவாரத்திலே கைப்பட்ட பூக்களைப் பணிமாறி, இத்தால் எம்பெருமான் ஆராதனைக் கெளியன் என்று காட்டினபடி.  நாள்வாய் நாடீர் – நாள் தோறும் ஆச்ரயியுங்கள்.  ஒருகால் ஆச்ரயிப்பது போதுமாயினும், ஸாதநாநுஷ்டானமன்றே; ஸ்வயம் போக்யமான செயலாகையாலே காலஷே மிதுவேயாகுகவென்கை.  “அரவணையானை நாடீரே”  என்கையாலே திருவனந்தாழ் வான்பெற்ற பேற்றை நீங்கள் பெறலாமென்று காட்டுகிறபடியாகக் கொள்ளலாம்; *சென்றார் குடையாமிருந்தால் சிங்காசனமாம் நின்றால்மரவடியாம் நீள்கடலுள், என்றும் புணையாமணி விளக்காம் பூம்பட்டாம் புல்குமணையாம் திருமாற்கு அரவு* என்று சொல்லப்பட்ட பேறு.

 

English Translation

The Ruler reclines on a serpent, in the ocean.  Strew flowers at his feet and worship him everyday

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top