(3937)
தானே உலகெலாம் தானே படைத்திடந்து
தானே உண்டுமிழ்ந்து தானே யாள்வானே.
பதவுரை
|
தானே |
– |
நாராயணனை தானே |
|
படைத்து இடந்து |
– |
ஸ்ருஷ்டித்து (பிரளயத்திலே) இடந்தெடுத்து |
|
உலகு எல்லாம் |
– |
ஸகல ஜகத்துக்கும் சரீரியா யுள்ளவன்; |
|
தானே உண்டு உமிழ்ந்து |
– |
ஒருவருடைய அபேஷையு மில்லாதபடி தானே (ஸமயங்களில்) உண்பதும் உமிழ்வதுஞ் செய்து |
|
தானே |
– |
அப்பெருமான் தானே (வேறொரு துணை யின்றியே) |
|
தானே ஆள்வான் |
– |
தானே நிர்வஹிக்குமவன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
****- நாராயண சப்தார்த்தமாகக் கீழப்பாட்டில் ப்ரஸ்துதமான ரஷகத்வம் விவாரிக்கப்படுகிறது இதில். உலகெல்லாம் தானே – ஸர்வம் கலு இதம் ப்ரஹ்ம* என்றதை அதுவதிக்கிறபடி, சாரிராத்ம பாவ நிபந்தனமாக ஜக்ய நிர்வாஹம் பண்ணுவது வேதாந்திகளின் முறைமையாகையாலும், சரீரியானவன் ரீரத்தை சரஷிக்கக் கடமைப்பட்டவானகையாலும் இதுவும் ரஷகத்வம் சொல்லுகையிலே முடிந்து நிற்கும்.
“உலகெல்லாம் தானே” என்றதற்கு நியாமகஞ் சொல்லுகிறது மேலெல்லாம் தானே படைத்திடந்து தானே யுண்டுமிழ்ந்து தானே யாள்வானாகையாலே; உலகெல்லாம் தானேயென்னக் குறையில்லையென்றபடி. பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தர சதகத்திலே *ஸதித்யுத்பத்தி ப்ரவ்ருத்தி க்ரஸநதியமநவ்யாப்நைராத்மநஸ் தே சேஷோ சேஷ: ப்ரபஞ்சோவபுரிதி பவதஸ் தஸ்ய சாபேதவாதா.* என்றருளிச் செய்ததற்கு இப்பாசுரமும் மூலமென்னலாம்.
English Translation
He made the Universe, He lifted it. He swallowed it and remade it. He is the protector
