(3863)
கண்டேகளிக்கின்றது இங்கென்றுகொல்கண்கள்
தொண்டேபுனக்காயொழிந்தேன் துரிசின்றி
வண்டார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய்
கொண்டே யுறைகின்ற எங்கோவலர்கோவே.
பதவுரை
|
வண்டு ஆர் சோலைகள் சூழ் மலர் திருநாவாய் |
– |
வண்டுகள் நிறைந்த மலரையுடைய சோலைகள் சூழ்ந்த திருநாவாயை |
|
கொண்டு உறைகின்ற |
– |
உகங்தவிடமாகத் திருவுள்ளம்பற்றி வர்த்திக்கிற |
|
எம் கோவலர் கோவே |
– |
எம் கோபாலகிருஷ்ணனே! |
|
துரிசு இன்றி உனக்கே தொண்டு ஆய் ஒழிந்தேன் |
– |
க்ருத்திமமில்லாமல் உனக்கே தொண்டனாய்விட்டேன் |
|
கண்கள் |
– |
எனது கண்களானவை |
|
இங்கு கண்டே களிக்கின்றது என்று கொல் |
– |
இத் திருப்பதியிலே கண்டு ஆனந்திக்கப் பெறுவது என்றைக்கோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***– எனக்காகத் திருநாவாயைக் கோயிலாகக் கொண்டு உறைகின்ற கோவலர்கோவே! உன்பக்கலிலே அநந்ய ப்ரயோஜனமான அன்மையுடையேனான வென்னுடைய கண்களின் விடாய் சொல்லத் தரமன்று; என்பசி தீராவிட்டாலும் என் கண்களின் பசி தீர்ந்தால் போதுமேயென்கிறார் ; உலகில் யாசிப்பவர்களே ‘என் பசி கிடக்கட்டும்; என் குழந்தை படுகிறபாடு பாருங்கள் ; அதன் பசியை முன்னம் தீர்த்தால் போதும்’ என்பர்கேள ; அது போலச் சொல்லுகிறபடி. (துரிசின்றி உனக்கே தொண்டா யொழிந்தேன்) உள்ளே ஒரு எண்ணமும் வெளியே மற்றோரெண்ணமுமாக இருக்கு மிருப்பு துரிசு எனப்படும் ; அதாவது க்ருத்திமம் ; அஃதின்றிக்கே உனக்கே தொண்டா யொழிந்தேனென்கிறார்.
English Translation
My Lord! King of the cowherd-clan, now living inTirunavali! O When will my eyes see you here and rejoice in pure love?
