(3864)
கோவாகிய மாவலியைநிலங்கொண்டாய்
தேவாசுரம்செற்றவனே திருமாலே
நாவாயுறைகின்ற என்னாரணநம்பி
ஆவாலவடியானி னென்றருளாயே.
பதவுரை
|
கே ஆகிய மா வலியை |
– |
பிரபுவாகத் தன்னை யயீமானித்திருந்த மஹாபலிடத்திளின்றும் |
|
நிலம் கொண்டாய் |
– |
பூமியை இரந்து பெற்றவளே |
|
தேவாசுரம் செற்றவனே |
– |
தேவாஸீர யுத்த்தில் ஒரு தலைக்கு நிர்வாஹகனாயிருந்தவனே |
|
திருமாலே |
– |
திருமகள் கொழுநனே |
|
நாவாய் உறைகின்ற |
– |
திருநாவாயிலே வர்த்திக்கிற |
|
என் நாரணநம்பீ |
– |
எனது நாராயணமூர்த்தியே |
|
ஆஆ |
– |
ஐயோ |
|
இவன் அடியான் என்று அருளாய் |
– |
இவன் நமக்கு அடியவனன்றோவென்று க்ருபை பண்ணி யருள வேணும் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***– திருநாவாயிலே நித்யவாஸம் பண்ணியருளாநின்ற தேவரீர் அடியேனுடைய அநந்யகதித்வத்தைக் கண்டு அருள் செய்தருளவேணுமென்கிறார். (கோவாகியமாவலிமை நிலங்கொண்டாய்) ஸர்வேச்வரன் இந்ததிரனை த்ரிலோகாதிபதியாக்கி வைத்தான்; அவனைத் தள்ளி அந்தப் பதவியைத் தான் கொள்ளை கொண்டு ‘நானே அரசு’ என்றிருந்தானாயிற்று மாவலி. அவன்றான் ஔதார்யமென்று ஒரு மஹாகுணமுடையவனாயிருந்த படியாலே” அதுவே பற்றாசாகத் தான் இரப்பாளனாய் நின்று வெகு சாதுரியமாகக் காரியத்தை முடித்தானாயிற்று எம்பெருமான் (தேவாசுரஞ் செற்றவனே) தேவாஸீரயுத்தத்திலே பரஸ்பரவதமேயாய்ச் செல்லா நிற்க, அநுகூலரான தேவர்களுக்காக அஸுரரை யழியச் செய்வதவனே! என்றபடி, (திருமாலே!) விரோதிகளை யழித்து அடியார்களைக் காத்தருள்வதற்கு ஹேது பிராட்டியோ டுண்டான சேர்த்தியென்று தெரிவித்தவாறு. இப்படிப்பட்ட திருக்குணங்கள் திருநாவாயிலே ப்ரத்யக்ஷிக்கலாம்படி யிருக்கின்றமையைக் காட்டுகின்றது மூன்றாமடி,. என்னுடைய அநந்ய கதித்வத்தையே நோக்கி க்ருமை செய்தருளவேணுமென்கிறார் ஈற்றடியால்.
English Translation
You took the Earth, from Bali king. O Tirumal, Lord of the gods, my friend living in Tirunavai! Take me as your servant
