(3863)

(3863)

கண்டேகளிக்கின்றது இங்கென்றுகொல்கண்கள்

தொண்டேபுனக்காயொழிந்தேன் துரிசின்றி

வண்டார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய்

கொண்டே யுறைகின்ற எங்கோவலர்கோவே.

 

பதவுரை

வண்டு ஆர் சோலைகள் சூழ் மலர் திருநாவாய்

வண்டுகள் நிறைந்த மலரையுடைய சோலைகள் சூழ்ந்த திருநாவாயை

கொண்டு உறைகின்ற

உகங்தவிடமாகத் திருவுள்ளம்பற்றி வர்த்திக்கிற

எம் கோவலர் கோவே

எம் கோபாலகிருஷ்ணனே!

துரிசு இன்றி உனக்கே தொண்டு ஆய் ஒழிந்தேன்

க்ருத்திமமில்லாமல் உனக்கே தொண்டனாய்விட்டேன்

கண்கள்

எனது கண்களானவை

இங்கு கண்டே களிக்கின்றது என்று கொல்

இத் திருப்பதியிலே கண்டு ஆனந்திக்கப் பெறுவது என்றைக்கோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– எனக்காகத் திருநாவாயைக் கோயிலாகக் கொண்டு உறைகின்ற கோவலர்கோவே! உன்பக்கலிலே அநந்ய ப்ரயோஜனமான அன்மையுடையேனான வென்னுடைய கண்களின் விடாய் சொல்லத் தரமன்று; என்பசி தீராவிட்டாலும் என் கண்களின் பசி தீர்ந்தால்  போதுமேயென்கிறார் ; உலகில் யாசிப்பவர்களே ‘என் பசி கிடக்கட்டும்; என் குழந்தை படுகிறபாடு பாருங்கள் ; அதன் பசியை முன்னம் தீர்த்தால் போதும்’ என்பர்கேள ; அது போலச் சொல்லுகிறபடி. (துரிசின்றி உனக்கே தொண்டா யொழிந்தேன்) உள்ளே ஒரு எண்ணமும் வெளியே மற்றோரெண்ணமுமாக இருக்கு மிருப்பு துரிசு எனப்படும் ; அதாவது க்ருத்திமம் ; அஃதின்றிக்கே உனக்கே தொண்டா யொழிந்தேனென்கிறார்.

 

English Translation

My Lord! King of the cowherd-clan, now living inTirunavali!  O When will my eyes see you here and rejoice in pure love?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top